
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 95 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றி பெற்றுள்ளது. அந்நிய மண்ணில் பங்களாதேஷ் அணி பெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி இது.
இந்தப் போட்டியில் வழமையான மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்கள் விளையாடவில்லை. மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய பண மீதி கொடுக்கப்படாமல் உள்ளதால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாதென மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கூறியது. இதனால் மேற்கிந்தியத்தீவுகள்அணி முற்றிலும் புதிய வீரர்களுடன் களமிறங்கியது. புதிய வீரர்களில் சிலர் மட்டுமே பிரகாசித்தனர்.
சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய பங்களாதேஷ் வீரர்கள் மகத்தான வெற்றி ஒன்றைப் பெற்றனர். இதுவே பங்களாதேஷ் அணி அந்நிய மண்ணில் அடைந்த வெற்றி. 60 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள பங்களாதேஷ் அணி பெற்றுக் கொண்ட 2ஆவது வெற்றி இது.
2ஆவது போட்டியிலும் பங்களாதேஷ் அணியின் வெற்றி அலை தொடருமா....
0 comments:
Post a Comment