
முரளி சுழல் பந்துவீச்சில் குறுகிய காலத்தில் பல உலக சாதனைகளைப் படைப்பாரென்று யாருமே நினைத்திருக்கவில்லை.ஏன் முரளி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் முரளி அறிமுகமாகி இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தி.

கிரிக்கெட் உலகில் முரளி பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரன்.
* டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (780)
*ஒரு இனிங்சில் 5 விக்கெட்டுகளுக்குமேல் அதிக தடவைகள் கைப்பற்றியமை (66)
*ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளுக்குமேல் அதிக தடவைகள் கைப்பற்றியமை (22)
*டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓட்டமற்ற ஓவர்களை அதிகம் வீசியமை (1770)
*டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் (161)
*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக மைதானங்களில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியமை (3 மைதானங்கள்)
*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வீரர்களை நேரடியாக bowld முறையில் வீழ்த்தியமை (162 )
*டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளியின் பந்துவீச்சில் களத் தடுப்பாளர்களிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்த வீரர்கள் (376)
*டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளியின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரால் ஸ்ரம்பிங் முறையில் ஆட்டமிழந்த வீரர்கள் (46)
*ஒருநாள் சரவதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (511)

முரளியின் சாதனைகள் பல.அவற்றுள் இவை சில.
கிரிக்கெட் உலகில் முரளி படைத்த சாதனைகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமானால் நானே நீண்ட ஒரு பதிவை தர வேண்டும்.நேரமோ இப்போது என்னோடு வில்லத்தனம் புரிவதால் இப்போதைக்கு இவ்வளவும்தான்.மிக விரைவில் முரளியைப் பற்றிய சாதனைப் பதிவை எதிர்பாருங்கள்.
சாதனை நாயகனுக்கு இனிய வாழ்த்துக்கள்.இன்னும் பல சாதனைகள் தொடரட்டும்.
2 comments:
சாதனை நாயகனுக்கு இனிய வாழ்த்துக்கள்.......
நமது நட்சத்திர பந்துவீச்சாளர் சாதனை நாயகன் முரளிக்கு இதயத்தால் இனிய வாழ்த்துக்கள்...
////மிக விரைவில் முரளியைப் பற்றிய சாதனைப் பதிவை எதிர்பாருங்கள்.////
மிக விரைவில் அதனை பதிய நமது மயூரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்....
Post a Comment