
உலகில் உன்னதமான உறவு எது என்று கேட்டால் நட்பு என்பார்கள் பலர். உணர்வுகளோடு சங்கமிக்கும் உன்னதமான உறவு இது.
உலகில் தாய் அன்புக்குப்பின் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன் அல்லது நண்பி காட்டும் தூய்மையான அன்புதான். அன்று முதல் இன்று வரை விலைமதிப்பற்ற சொத்தாக நட்பு போற்றப்பட்டு வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் சொந்த உறவுகளே நம்மை வெறுக்கும்போது நட்புள்ளம் கொண்ட நண்பர்களே எம்மை அரவணைக்கிறார்கள்.
ஒவ்வொரு தினத்தைக் கொண்டாடவும் ஒரு காரணம் இருக்கும். அதற்கு இந்த நட்பு தினமும் விதிவிலக்கல்ல.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில்,ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து,அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்நிய இறக்குமதியால் ஆயிரமாயிரம் தினங்கள் அவ்வப்போது வந்து போனாலும்,நண்பர்கள் தினத்திற்கு மட்டும் என்றுமே நல்ல
வரவேற்பிருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ மாட்டார்கள். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்க்கையில் நண்பர்களின் தேவை அவசியமாகிறது. பெற்றோருக்கு அடுத்ததாக மகிழ்ச்சி, துக்கம் இவற்றில் நண்பர்களின் பங்குபற்றல் அதிகமாகவே உள்ளது. பெற்றோரிடம் கூற முடியாத விடயங்களை நண்பர்களிடம் கூறி தீர்வுகளைக் கண்டவர்கள் நம்மில் பலர்.
இனம்,மொழி,பால் பாகுபாடின்றி அன்பின் அடையாளமாக மலர வேண்டும் நட்பு. நட்பு விசித்திரமானது.விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது.
நட்பு உன்னதமானது.அதனை மதித்து அதனை கௌரவித்து நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவோம்.
"எனக்கு முன்னால் நடந்து செல்லாதீர்கள்.உங்களைப் பின்பற்றி வர நான் விரும்பவில்லை.என் பின்னால் நடந்து வராதீர்கள்.உங்களுக்கு முன்னோடியாக இருக்க நான் விரும்பவில்லை.என்னுடனே நடந்து வாருங்கள் என் நண்பர்களாக"
2 comments:
///இன்றைய காலகட்டத்தில் சொந்த உறவுகளே நம்மை வெறுக்கும்போது நட்புள்ளம் கொண்ட நண்பர்களே எம்மை அரவணைக்கிறார்கள். ///
இது உண்மை தான் அண்ணா....
பதிவு அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்....
அப்படியே என் வலைப் பக்கமும் வந்து பாருங்க......
உலகில் உன்னதமான நட்பைப் பற்றி தந்துள்ளீர்கள்.
உங்கள் க௫த்துக்கள் சுவாரஸ்யமாக உள்ளது.தொடர்க....
Post a Comment