
வைரமுத்து,எனக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவர். இன்றைய நிலையில் நா.முத்துக்குமார், பா.விஜய்,தாமரை,யுகபாரதி என புதிய பாடலாசிரியர்களின் பாடல்களில் மனது மயங்கினாலும் வைரமுத்துவின் பாடல்வரிகளை எப்போது கேட்டாலும் மனதை நிறைக்கத்தான் செய்கின்றது.
வைரமுத்துவும் இளையராஜாவும்.... வைரமுத்துவும் ரகுமானும் கூட்டணி அமைத்து சரணமும் பல்லவிகளும் எழுதி இசைத்த பாடல்கள் என்னைப் பொறுத்தவரை அருமையான காலங்கள். இசை உள்ளங்கள் காதலித்த (பாடல் வரிகள்,இசை) காலங்கள்.
அருமையான பாடல் வரிகளுடன் ரசிகர்களுக்குப் பரிட்சயமில்லாப் பழந்தமிழ்ப்பாடல்களையும் நேரடியாகவும் சிலநேரம் மறைமுகமாகவும் வைரமுத்து தந்துள்ளார். 'தீண்டாய் தீண்டாய்'(படம்- என் சுவாசக்காற்றே) பாடலில் ஆரம்பம் ஒரு சங்கப்பாடலே... இப்படிப் பல பாடல்கள்.....
வைரமுத்து,கவிதைகள் என்று எழுதியதை வாசிக்கும்போது சில சமயம் சில கவிதைகள் பிடிக்காமல் போவதுண்டு. அதுவே பாடலாகும்போது அதிகம் ரசிக்கப்படுவதுமுண்டு. 'என்னவளே அடி என்னவளே' 'நீ காற்று நான் மரம்' இவை சில.
ஜூலை 13-1953 இல் இந்தியாவின் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்தார். 1984இல் நிழல்கள் திரைப்படத்தின் "இது ஒரு பொன் மாலைப்பொழுது" எனத் தொடங்கும் பாடல் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.இதுவரை 5500 க்கும் அதிகமான பாடல்களைத்தந்த இவருக்கு சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது ஐந்து முறை கிடைத்துள்ளது.
பாடல்கள் மட்டுமன்றி பல கவிதைத் தொகுப்புகளையும் தந்துள்ள வைரமுத்து இன்னும் பல பாடல்களைத் தரவேண்டும்.....
வைரமுத்து....தமிழ் கவிதைக்குக் கிடைத்த பெரும் சொத்து....
வாழ்த்துக்கள் வைரமுத்து........
2 comments:
really great man!!!
//வைரமுத்து,கவிதைகள் என்று எழுதியதை வாசிக்கும்போது சில சமயம் சில கவிதைகள் பிடிக்காமல் போவதுண்டு. அதுவே பாடலாகும்போது அதிகம் ரசிக்கப்படுவதுமுண்டு. 'என்னவளே அடி என்னவளே' 'நீ காற்று நான் மரம்' இவை சில//
மிக சிறந்த அவதானிப்பு
Post a Comment