உலகக் கிண்ணம் இந்தியா வசம் பத்தாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரு ஆசிய அணிகளான இலங்கை,இந்திய அணிகள் மோதிக் கொண்டன.இது உலகக் கிண்ண வரலாற்றில் முதன் முறையாகவும் அமைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கையணிஆரம்பத்தில் மந்தமாகவே ஓட்டங்களைப் பெற்றாலும் பின் வரிசையில் மஹேல,குலசேகர,திசர பெரேரா ஆகியோரின் துடுப்பாட்டத்தின் உதவியால் ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ஓட்டங்களைப் பெற்றது. (மஹேல-103*)
275 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா களமிறங்கியது. இந்தியாவுக்கு ஆரம்பத்திலே மாலிங்க அதிர்ச்சியைக் கொடுத்தார்.சச்சின்,சேவாக் விரைவில் வெளியேறினர்.கம்பீர்,கோலி இணைப்பாட்டம் ,கம்பீர் டோனி இணைப்பாட்டம் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களைப் பெற்று இந்தியா 6 விக்கெட்டால் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலக சாம்பியனானது.(கம்பீர் 97,டோனி 91*) 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா மீண்டும் உலக சாம்பியனானது.மீண்டும் இரண்டாவது தடவையாக இலங்கை இரண்டாமிடத்தைப் பெற்றது.
ஆட்ட நாயகன்: டோனி
தொடர் நாயகன்: யுவ்ராஜ் சிங். இந்த இறுதிப் போட்டியுடன் முரளியும் ஒருநாள் போட்டிகளிலிருந்து விடை பெற்றுக் கொண்டார்.
சாதனை நாயகனான முரளி பற்றிய சிறப்புப் பதிவு விரைவில்.
0 comments:
Post a Comment