Pages

Thursday, April 30, 2009

அசத்தும் அனுபவம்...'''...

"டுவென்டி-20' என்றால் இளம் வீரர்களுக்கான களம் என்றும் டெஸ்ட் போட்டிகள் சிரேஷ்ட வீரர்களுக்கான ஆட்டம் என்றும் ஒரு எழுதப்படாத கருத்து நிலவி வருகிறது. இதற்கேற்ப கிரிக்கெட் அணிகள் "டுவென்டி-20' போட்டியில் இறங்கும் போது திடீரென புதிய முகங்களாக இறங்குவார்கள். கேட்டால் அவர்கள் தான் அதிரடியாக விளையாடுவார்களாம். யார் சொன்னது இப்படி. விளையாட்டுக்கு வயது தடையில்லை. நாங்களும் இதில் சாதிப்போம் என மிரட்டுகிறார்கள் உலக முன்னணி சிரேஷ்ட வீரர்கள். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது கட்ட "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் இதுவரை நடந்துள்ள போட்டிகளை பார்த்தால் சச்சின், ஜெயசூர்யா, டிராவிட், கும்ளே, முரளிதரன், ஹைடன், கில்கிறிஸ்ட் மற்றும் வார்ன் என சிரேஷ்ட வீரர்களின் எழுச்சி நன்றாக தெரியும். "டாப் ஸ்கோரர்' வரிசையில் முதல் 6 இடத்தில் இருக்கும் வீரர்களில் 5 வீரர்கள் சிரேஷ்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் 16,684 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில்12,773 ரன்கள் குவித்து கிரிக்கெட் முதல்வனாக வருகிறார் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் "தி கிரேட்' சச்சின். 36 வயதை அடைந்துள்ள நிலையிலும் இவரது ரன் எடுக்கும் வேகம், தாகம் சற்றும் குறையவில்லை. சென்னை அணிக்கு எதிராக 59 (49 பந்துகள்), கோல்கட்டாவுடன் 68 (45 பந்துகள்) என தொடர்ந்து ரன்கள் குவித்து வருகிறார்.

ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ஹைடன், கில்கிறிஸ்ட் இருவருக்கும் வயது 37. ஆனால் துடுப்பாட்டத்தில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளனர். இதில் ஹைடன், அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில். இவர் பெங்களூரு அணிக்கு எதிராக 35 பந்துகளில் 65 ரன்கள் குவித்து எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்கிறார். இதே அணிக்கு எதிரான டெக்கான் சார்ஜர்ஸ் தலைவர் கில்கிறிஸ்ட் 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்துள்ளார்.

பெங்களூரு அணி கடந்த தொடரில் ஏமாற்றிய போதும் அணியின் அதிக ஓட்டங்கள் குவித்தவீரராக டிராவிட் ஜொலித்தார். இம்முறையும் முதல் 4 ஆட்டத்தில் 144 ஓட்டங்கள் குவித்து 6வது இடத்தில் உள்ளார். இதில் ராஜஸ்தானுக்கு எதிராக அடித்த 66 (48 பந்துகள்) ஓட்டங்களும் அடங்கும்.

பெங்களூரு அணிக்காக விளையாடும் முன்னாள் இந்திய வீரர் கும்ளே, தொடரின் முதல் போட்டியில் 5 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 5 ராஜஸ்தான் விக்கெட்டுகள் சாய்த்து, 38 வயதிலும் மிரட்டினார். இவர்களை தவிர 39 வயதில் ராஜஸ்தான் அணியின் வார்ன் பந்து வீச்சில் மட்டுமல்லாது தலைவராகவும்அசத்துகிறார். சென்னை அணியின் முரளிதரனும் சுழலில் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார்.

அனுபவ வீரர்களின் அதிரடி தொடருமா?Wednesday, April 29, 2009

எண்ணுக்கு மவுசு ......ஆ ஆ ....

85,000 இந்தியரூபாய்க்கு ஏலம் போன கார் பதிவு எண் - 'ஏ.கே.47'

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஏ.கே.47 என்ற கார், பைக், போன் என எண்களைக் கொண்ட எதுவாக இருந்தாலும் அதில் பேன்சி எண் வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்பவர்கள் நிறைய பேர். இதற்காக சம்பந்தப்பட்டவர்களை தனியாக கவனித்து தங்களுக்குப் பிடித்தமான, ராசியான எண்களை வாங்குவது சகஜமாக நடந்து வருவதுதான்.இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏ.கே.47 என்ற எண்ணை ஏலம் எடுக்க கடும் போட்டியே நடந்துள்ளது. இறுதியில் அதில் வென்றவர் முகம்மது ரபீக் மிர் என்பவர்.பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மிர், ஏ.கே.47 எண்ணை ஏலம் எடுத்தது குறித்து கூறுகையில், ஏ.கே.47 என்ற எண் ஏலத்திற்கு வருவதை அறிந்து அதை எடுக்க தீர்மானித்தேன். அந்த எண் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் பெரும் தொகை கொடுக்கவும் நான் தயாராக இருந்தேன் என்றார்.மொத்தம் 35 பேர் ஏ.கே. 47 எண்ணை ஏலம் எடுக்க வந்திருந்தனராம்.இதற்கு முன்பு 007, 786, 420, 470, 777, 888 ஆகிய எண்களுக்கு கடும் கிராக்கி இருந்ததாம். ஆனால் தற்போது ஏ.கே. வரிசையில் வெளியாகும் பதிவு எண்களுக்கு செம கிராக்கியாம். அதிலும் ஏ.கே.47 என்ற எண்ணுக்குத்தான் 35 பேர் வரை போட்டியிட்டுள்ளனராம்.

உங்களுக்கு என்ன எண் வேண்டும் ..... ஆனால் காசு கொஞ்சம் செலவாகுமே.....

Tuesday, April 28, 2009

ஏ.பி.எல்....

இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்), இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகியவற்றைத் தொடர்ந்து ரசிகர்களைக் கவர வருகிறது அமெரிக்கன் பிரீமியர் லீக் (ஏபிஎல்) கிரிக்கெட் போட்டி. ஐ.சி.எல். போல சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத அமைப்புதான் ஏ.பி.எல். என்றாலும் இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டியில் ஒப்பந்தமான ஆஸ்திரேலிய வீரர்கள் ஜேசன் கில்லெஸ்பி, டேமியன் மார்ட்டின் ஆகியோர் அதில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்போட்டி நியூயார்க்கில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.அமெரிக்க விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அமைப்பின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஜே மிர், 6 அணிகளைக் கொண்டு இப்போட்டியை நடத்த முனைந்துள்ளார்.திட்டமிட்டுள்ளபடி போட்டி நடைபெறுமானால், டேமியன் மார்ட்டின் தலைமையிலான பிரீமியம் உலக அணியில் கில்லெஸ்பி இடம்பிடிப்பார். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் வீரர்கள் இப்போட்டியில் விளையாட உள்ளனர்.இதற்கிடையே இந்த அமைப்பில் சேர முனைந்துள்ள வீரர்களுக்கு கிரிக்கெட்ஆஸ்திரேலிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் பெறாத அமைப்பு இது. ஆதலால் விளையாட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் எச்சரிக்கை குறித்தோ, ஐசிசியின் கருத்து குறித்தோ கவலையில்லை என கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.

ம்ம்ம்ம்...... கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.....

Saturday, April 25, 2009

‌திரை‌யுலக மேதை ச‌த்ய‌ஜி‌த் ரே!
வங்காள மொழி திரைப்பட இயக்குனரும் திரையுலக மேதை என்று அறியப்பட்டவருமான சத்யஜித் ரேயின் நினைவு தினம் கடந்த 23ஆம் திகதி அனுசரிக்கப்பட்டது.

எந்த ஒரு ஆவேச வசனமும் இல்லாத இந்த அற்புதமான காட்சி பெண் சமுதாயத்தின் நிலையை, தனிமையை அப்படியே தத்ரூபமாக காட்டியது. இந்த படம் வெளிவந்த போது விமர்சகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்: ஒரு பெண் வாசலுக்கு வந்து கதவைத் திறப்பதை 15 நிமிடம் காட்டவேண்டுமா என்றார். அதற்கு சத்யஜித் ரே பதில் கூறுகையில், ஒரு பெண் வாசலுக்கு வரும் ஒரு 15 நிமிடத்தை உங்களால் பொறுக்கமுடியவில்லை எனில், இவ்வளவு ஆண்டுகாலமாக வெளியே வராமலேயே இருக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்குக் ஒன்றுமே தெரியவில்லையா? என்றார்.கறுப்பு வெள்ளை காலக் கட்டத்திலேயே கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள நெருக்கமின்மையை பைனாகுலர் காட்சி மூலம் சூட்சமமாக வெளிப்படுத்தியவர் இவ்வாறுதான் பதிலளிப்பார்.கிராமிய வாழ்வின் சோகம் கலந்த ஒரு இனிமை இவரது படங்களில் வெளிப்பட்டுள்ளன. தூரத்து இடிமுழக்கம் (இது தமிழில் வந்த தூரத்து இடி முழக்கம் அல்ல) என்ற படத்தில் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் இந்தியாவை தாக்கும் அச்சுறுத்தல் இருந்தபோது ஒரு கிராமம் எவ்வாறு தனது பிழைப்பிற்கு கஷ்டப்பட்டது என்றும் அப்போது வறுமையிலும் அந்த மனிதர்கள் எவ்வாறு செம்மையாக வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டியுள்ளார்.எந்த துன்பமான காலக் கட்டத்திலும் மனித உறவுகள் கைகோர்த்தால் துன்பத்தை வெல்லலாம் என்று இந்த படத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார் ரே. "இவரது படங்களை காணத் தவறியவர்கள், சூரியனையும், சந்திரனையும் காணாத ஒரு உலகத்தில் வாழ்வதாகவே பொருள்" என்று ஜப்பானிய இயக்குனர் மேதை அகிரா குரொசாவா கூறியது நினைவு கூறத்தக்கது.

அதிக மக்கள் வாழும் நகரங்கள்


உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்களில் முதலில் வருவது டோக்கியோ (சுமார் 3.5 கோடி பேர்).
நியூயார்க் இரண்டாமிடத்திலும் (2.02 கோடி), தென்கொரியாவின் தலைநகர் சியோல் மூன்றாவதுஇடத்திலும் (1.99 கோடி) இருக்கிறது.
தெற்காசியாதெற்காசியாவில் அதிக மக்கள் வாழும் நகரம் மும்பை. 1.79 கோடி மக்கள் வசிக்கும் மும்பை உலகில்ஆறாவது இடத்தில் இருக்கிறது.

தென் கிழக்கு ஆசியா
தென்கிழக்காசியாவில் முதலாவதாக மணிலா உலகின் 10வது இடத்திலும் (1.35 கோடி). தொடர்ந்து
15-வது இடம்
ஜகார்த்தா, இந்தோனேசியா
31-வது இடம்
பாங்காக், தாய்லாந்து
ஆகிய இடங்களில் இருக்கிறது. சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகியவை முதல் 50க்குள் வரவில்லை.
பட்டியலில் முற்றிலும் விடுபட்டுப் போன கண்டம் ஆஸ்திரேலியா. ஐரோப்பாவின் அதிக மக்கள் வாழும்நகரமான மாஸ்கோ உலக அளவில் 12-வது இடத்தில் தான் இருக்கிறது.

கா‌கித‌ம்
நா‌ம் இ‌ப்போது எ‌ளிதாக‌ப் பய‌‌ன்படு‌த்‌தி தூ‌க்‌கி எ‌றியு‌ம் கா‌கித‌ம் எ‌ப்படி ‌பிற‌ந்தது?
கி.மு. 200-ல் பழைய து‌ணிக‌ள் ம‌ற்று‌ம் ‌‌மீ‌ன் வலைகளை‌க் கொ‌ண்டு கா‌‌‌கித‌ம் தயா‌ரி‌த்தன‌ர். து‌ணிகளை‌க் கொ‌ண்டு செ‌ய்ய‌ப்படுவதா‌ல் இத‌‌ன் ‌தயா‌ரி‌ப்பு செலவு அ‌திகமாகவு‌ம், அளவு‌ குறைவாகவு‌ம் இரு‌ந்தது.
300 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகு மர‌ப்ப‌‌ட்‌டைகளையு‌ம், தாவர நா‌ர்களையு‌ம் சே‌ர்‌த்து கா‌கித‌ம் தயா‌ரி‌க்கு‌ம் முறையை அ‌றிஞ‌ர் சா‌ய் லு‌ன் எ‌ன்பவ‌ர் க‌ண்டு‌பிடி‌த்தா‌ர்.
எ‌னினு‌ம் தரமான, ம‌லிவான கா‌கித‌ம் தயா‌ரி‌க்கு‌ம் சோதனை முய‌ற்‌சிக‌ள் தொடர்ந்து மேற்கொள்ளப்ப‌ட்டு வ‌‌ந்தன. பல நூ‌ற்றா‌‌ண்டுக‌ள் க‌ழி‌ந்தன.
இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 18-ம் நூற்றா‌ண்டில் ரெனி டி ரீமர் என்பவர் ஒருவகை குளவியைக் கவனித்தார். அவை, மரத் துணுக்குகளை மென்று அரைத்து பின்னர் அந்தக் கூழைத் துப்பி ‌விடு‌கி‌ன்றன. அ‌ந்த கூழை வை‌த்து அவைக‌ள் வீடு கட்டிக்கொள்வதைக் கண்டார். ஆக, மரக்கூழை ந‌ன்கு ம‌சி‌த்தா‌ல் நா‌ம் ‌விரு‌ம்பு‌ம் உருவ‌ம் பெறலா‌ம் எ‌ன்பதை அடி‌ப்படையாக‌க் கொண்டு காகிதம் தயா‌ரி‌க்கு‌ம் முறையை க‌ண்டு‌பிடி‌த்தா‌ர் ரெனி டி ரீமர்.
ஆக, கா‌கித‌ம் தயாரிக்கும் முறை ஒரு குள‌வி‌யிட‌ம் இரு‌ந்து தா‌ன் நா‌ம் க‌ற்று‌க் கொ‌ண்டோ‌ம்.
மரத்தை எப்படி சரியாக அரைத்து காகிதம் தயாரிப்பது என்று கெல்லர் என்பவர் கண்டுபிடித்தார்.
ஒரே மர‌த்‌தி‌ல் இரு‌ந்து பல வகையான கா‌கித‌ங்களை‌த் தயா‌ரி‌க்கலா‌ம். அதாவது, ஒ‌‌வ்வொரு தர‌த்‌தி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு வகையான இய‌ந்‌திர‌ம், வே‌தி‌ப் பொரு‌ட்க‌ள் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு வித‌விதமான கா‌கித‌ங்க‌ள் தயா‌ரி‌க்க‌ப்படு‌கி‌ன்றன

பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்

உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.
இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.
அதில்…வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.
தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.
பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.
பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.
ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.
ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.
மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.
எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.
பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்.
எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.
ச‌ச்‌சி‌ன் டெ‌‌ண்டு‌ல்க‌ர் பிறந்த நாள்!
சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் எ‌னது ஆட்டத்தையே நினைவுபடுத்துகிறது என்று கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆட்டக்காரராகத் திகழ்ந்த சர் டொனால்ட் பிராட்மேன் கூறினார்.
இந்திய கிரிக்கெட் ர‌சிக‌ர்களா‌ல் ‌‌லி‌ட்டி‌ல் மா‌‌‌‌ஸ்‌ட‌ர் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் ச‌ச்‌சி‌ன், தனது தனித்த அபார ஆட்டத்தினால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளவர்.
ஆஸ்ட்ரேலியாவில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரராக களமிறங்கிய சச்சின் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் அசர வைத்தவர்.
16 வய‌தி‌ல் ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌விளையா‌ட்டை துவ‌ங்‌கிய ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர், பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி‌க்கு எ‌திரான தனது முத‌ல்‌டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் ‌விளையாடினா‌ர்.
டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் டொனா‌ல்டு ‌ஃ‌ப்ரா‌ட்மே‌னு‌க்கு‌ம் ‌பிறகு ச‌ச்‌சி‌ன் எ‌ன்று‌ம், ஒரு நா‌ள் போ‌‌ட்டிக‌ளி‌ல் ‌வி‌விய‌ன் ‌ரி‌ச்ச‌ர்ச‌னு‌க்கு ‌பிறகு ‌ச‌ச்‌சி‌ன் இரு‌ப்பதும் பெருமைபட வே‌ண்டியது எ‌ன்று வெ‌ஸ்டி‌‌ன் எ‌‌ன்ற இணையதள‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளது.
இ‌ந்‌திய ‌‌கி‌ரி‌க்க‌ெ‌ட் ‌வீர‌ர்க‌ளி‌ல் அ‌திக ‌விருதுகளை பெ‌ற்றவ‌ர் ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர். 1997-98ஆ‌ம் ஆ‌ண்டு ரா‌ஜீவ் கா‌ந்‌தி கே‌ல் ர‌த்னா ‌விரு‌ம், 1999ஆ‌ம் ஆ‌ண்டு ‌சிற‌ந்த சேவை‌க்காக ப‌த்மஸ்ரீ ‌விரு‌து‌ம், பிறகு ப‌த்ம ‌விபூஷ‌ண் ‌விரு‌‌தும் ச‌ச்‌சி‌ன் பெ‌ற்‌று‌ள்ளா‌ர்.
ஒரு நா‌ள் போ‌ட்டி‌யி‌ல் 16,000 ர‌ன்களு‌‌க்கு மே‌ல் கு‌வி‌த்து‌ள்ள ச‌ச்‌சி‌ன், டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் லாராவு‌க்கு அடு‌த்தபடியாக உ‌ள்ளா‌ர். டெ‌‌‌‌‌‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் 42சத‌ங்களு‌ம், ஒரு நா‌ள் போ‌ட்டி‌யி‌ல் 43சத‌‌‌ங்க‌ள் அடி‌த்து சாதனை படை‌த்து‌ள்ளா‌ர் ச‌ச்‌சி‌ன்.
2003ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த உலக கோ‌ப்பை‌யி‌ல் அ‌திக ர‌ன் கு‌வி‌த்த ‌வீர‌ர் எ‌ன்ற பெருமையை பெ‌ற்றவ‌ர் ச‌ச்‌சி‌ன். 1994, 1996, 1997, 1998, 2000, 2003 ஆ‌‌ண்டுக‌ளி‌ல் 1000 ர‌ன்க‌ளை கு‌வி‌த்து‌ள்ள ஒரே ‌‌வீர‌ர் ‌ச‌ச்‌சி‌ன். ஒரு நா‌ள் போ‌ட்டி ம‌ற்று‌ம் டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌க‌ளி‌ல் அ‌திக சத‌ங்க‌ள் அடி‌த்த‌தி‌ல் ச‌ச்‌சி‌ன் முத‌ல் இட‌த்‌தி‌‌ல் உ‌ள்ளா‌ர்.
தனக்கும், தனது நாட்டிற்கும் இன்றுவரை பெருமை சேர்த்துவரும் சச்சின் டெண்டுக்கரின் பிறந்த நாள். வாழ்த்துங்கள் சச்சினை!
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates