

'20-20' உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய அரையிறுதிப் போட்டியில் இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் மோத உள்ளன. வலுவான சுழற்பந்து வீச்சாளர்களை உள்ளடக்கிய இலங்கை அணியை சமாளிக்க மேற்கிந்தியத்தீவுகள் அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை, லீக் மற்றும் "சூப்பர்-8' சுற்றுகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்துள்ளது. இதுவரை தோல்வி அடையவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜெயசூர்யா, தில்ஷன் ஜோடி நிலைத்து நின்று ஆடினால், மேற்கிந்தியத்தீவுகளுக்கு சிக்கல் தான்.
மேற்கிந்தியத்தீவுகளின் முக்கிய பலமே தலைவர் கெய்ல் தான். இவர் வாணவேடிக்கை காட்டினால் இலங்கை அணிக்கு திண்டாட்டம் தான்.
இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.
எனது பார்வையில் இலங்கைக்கே வெற்றி.........
எனது பார்வையில் இலங்கைக்கே வெற்றி.........
இலங்கையின் வெற்றி சனத்,தில்ஷன் துடுப்பில்....
1 comments:
அண்ணா உங்கள் ஊகம் சரியாகிவிட்டது..
பதிவுகள் நல்லாயிருக்கிறது...
Post a Comment