இறுதியில் ஆசிய அணிகள்

20-20' உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை,பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.தில்ஷானின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க,மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான நேற்றைய அரையிறுதியில் 57 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றி பெற்றது.
நேற்று நடந்த தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு தில்ஷானின் அதிரடி காட்ட ஜெயசூர்யா அடக்கி வாசித்தார். முதல் விக்கெட்டுக்காக இந்த ஜோடி 73ஓட்டங்களைப் பெற்றது.ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், தில்ஷான் அதிரடியில் மிரட்டினார்.மேற்கிந்தியத்தீவுகளின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த தில்ஷான் ஆட்டமிழக்காமல் 96ஓட்டங்களை விளாச, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை எடுத்தது. 4 ஓட்டங்களால் தில்ஷான் சதம் அடிக்க செய்யமுடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றம்....
இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு கிறிஸ் கெயிலின் ஆட்டம் மட்டுமே பாலைவனச் சோலையாகக் காட்சியளித்தது.மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களை மட்டும் பெற்று இலங்கை சுழலில் ஆட்டம் கண்டனர். தனி ஆளாகப் போராடிய கெய்ல், 63 ஓட்டங்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 101 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட சில விடயங்கள் இந்த அரையிறுதிப் போட்டியில் நடந்தேறியது (சனத், தில்ஷான்,கெய்ல்) இந்த மூவரும்தான்அரையிறுதிப் போட்டியின் கதாநாயகர்கள்
நான் எதிர்வு கூறியது நிஜமாகியமை எனக்கும் மகிழ்ச்சிதான்........
0 comments:
Post a Comment