
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட"20-20' உலகக் கிண்ண அதிரடித் தொடர் இன்று இங்கிலாந்தில் அமர்க்களமாக ஆரம்பமாகிறது. விண்ணைத் தொடும் சிக்சர்கள், எல்லையைக் கடக்கும் பவுண்டரிகள், "திரில்' வெற்றிகளை மீண்டும் ரசிக்க ரசிகர்கள் தயார். இன்று முதல் 17 நாட்களுக்கு "சூப்பர்' விருந்து.
2ஆவது "20-20' உலகக் கிண்ண தொடரில் மொத்தம் 12 அணிகள் மோத உள்ளன. இந்தியா,அவுஸ்ரேலியா,இலங்கை, தென்னாபிரிக்கா,மேற்கிந்தியத்தீவுகள்,பங்களாதேஷ்,இங்கிலாந்து, நியூசிலாந்து,பாகிஸ்தான் ஆகிய 9 அணிகள் நேரடியாக தொடருக்கு தகுதி பெற்று விட்டன. கடந்த 2008 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதி சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும் இத்தொடருக்கு தேர்வாயின. ஜிம்பாப்வே உலககோப்பை தொடரிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டது. இதனால் தகுதி சுற்றில் மூன்றாவது இடம் பெற்ற ஸ்கொட்லாந்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது. மொத்தம் உள்ள 12 அணிகள் "ஏ', "பி' "சி' "டி' என நான்கு பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்ற மற்ற இரண்டு அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடத்தில் வரும் அணிகள், "சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும்.அதன் பின் இந்த அணிகள் தமது பிரிவில் இடம் பெற்ற மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை போதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் வரும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில், வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் சந்திக்கும்.
இம்முறை இந்தியா,அவுஸ்ரேலியா,இலங்கை, தென்னாபிரிக்கா,மேற்கிந்தியத்தீவுகள்,இங்கிலாந்து, நியூசிலாந்து,பாகிஸ்தான் அணிகள் பலத்துடன் களமிறங்கினாலும் பங்களாதேஷ், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து அணிகள் அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கின்றன. "20-20' போட்டிகளை பொறுத்த வரை எதுவும் நடக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட 120 பந்துகளில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தாலே போதும்.
ஆனைக்கும் அடி சறுக்கும்..... இது கிரிக்கெட்டில் அடிக்கடி நிகழும்.....
0 comments:
Post a Comment