

" 20-20" உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணியை எதிர்த்து பாகிஸ்தான் இன்று களமிறங்குகிறது.இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடும் அணி என பலராலும் கூறப்படும் தென்னாபிரிக்கா ஆரம்பத்திலிருந்தே இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அசத்தி வருகிறது. தென்னாபிரிக்கா துடுப்பாட்டத்தில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் வலுவாக திகழ்கிறது.
இத்தொடரின் ஆரம்பத்தில் கண்டுகொள்ளப்படாத அணியாக இருந்த பாகிஸ்தான், தற்போது அரையிறுதி வரை முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் உமர்குல், நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர்-8 சுற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் இதுவரை 11 விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். பாகிஸ்தானின் உண்மையான பலமாக பந்துவீச்சு உள்ளது.
தென்னாபிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஒரே ஒரு 20-20 ஓவர் சர்வதேச போட்டியில் சந்தித்து உள்ளன. கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்த அந்த போட்டியில் தென்னாபிரிக்கா10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. பாகிஸ்தானுக்கே அதிக வெற்றி வாய்ப்பு அதிகம்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் அணி எது?
0 comments:
Post a Comment