Pages

Saturday, May 2, 2009

தமிழ்த் திரையுலகில் பாலாஜியின் பிரிவு......

தாநாயகனாக, வில்லனாக, குணசித்திர நடிகராக தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டிற்கு மேலாக நடித்தும், சிறந்த தயாரிப்பாளராகவும் திகழ்ந்த நடிகர் பாலாஜி இன்று சென்னையில் காலமானார்.
மணாளனே மங்கையின் பாக்கியம், சகோதரி, படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா, என் தம்பி, ஆண்டவன் கட்டளை, போலீஸ்காரன் மகள் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் பாலாஜி. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

பில்லா,பலே பாண்டியா,படித்தால் மட்டும் போதுமா போன்ற படங்களில் பாலாஜியின் நடிப்பு மிகவும் ரசிக்கப்பட்டது.எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்த பல படங்கள் வெற்றி பெற்றன. தெலுங்கு,ஹிந்தி மலையாள படங்களை மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர்.இவரது படங்களில் பெரும்பாலும் கதாநாயகனின் பெயர் ராஜா எனவும், கதாநாயகியின் பெயர் ராதா எனவும் சூட்டப்படும். இவரது திருமண நாளான ஜனவரி 26-ல் இவர் தயாரித்த பெரும்பாலான படங்கள் வெளியிடப்பட்டன.

கமல், ரஜினியை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை தந்தவர் பாலாஜி.
மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் இவர் விளங்கினார். ராஜா,நீதி போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இலங்கையின் மகாராஜா நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த "தீ" திரைப்படத்தில் பாலாஜியின் பங்கு சிறப்பாக அமைந்தது.

ராஜா சாண்டோ மற்றும் ஃபிலிம் பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளன.
மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகராகத் திகழும் மோகன் லால் இவருடைய மருமகனாவார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜி அவர்கள் இன்று காலமானார்.
இவரது சில படங்களை பார்த்தவன் என்ற வகையில் இவரது நடிப்பில் உருவான காட்சிகள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இதை வாசிக்கும்போது உங்கள் மனதிற்குள்ளும் பாலாஜியின் நடிப்பில் உருவான சில காட்சிகள் அவரை ஞாபகப்படுத்தும்.
பாலாஜி நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது நடிப்பில் உருவான திரைப்படக் காட்சிகள் நம் கண்களுக்குள்ளும் மனதிற்குள்ளும் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும்....... பாலாஜி அவர்களுக்கு இதய அஞ்சலிகள்.......

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates