

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை ஆரம்பமாகிறது. ஜூன் 7-ம்தேதி வரை நடைபெற உள்ள இப் போட்டியில் முன்னணி வீர,வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
ஆடவர் பிரிவு::: தர வரிசையில் முதலாம் இடத்திலும் நடப்பு சம்பியனாகவும் திகழும் ஸ்பெயினின் ரஃபேல் நடால்,முன்னாள் உலகின் நம்பர்-1 வீரரான சுவிட்சர் லாந்தின் ரோஜர் பெடரர் இடையே கடும் போட்டி நிலவப்போகிறது.தொடர்ந்து 4முறை பிரெஞ்ச் சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ள நடால், 5 வது முறையாக சாதிக்க உள்ளார்.பிரெஞ்ச் பகிரங்க தொடரில் இதுவரை, நடால், சுவீடனின் ஜோர்ன் போர்க் ஆகியோர் தலா 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
களிமண் தரை போட்டிகளில் ராஜாவாகத் திகழும் நடாலுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வீரராக வலம் வருகிறார் பெடரர். இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளபெடரர், பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பட்டம் வெல்லாதது பெரும் ஏமாற்றம் தான். கடந்த 2006, 2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் பிரெஞ்ச் பகிரங்க இறுதி வரை முன்னேறிய பெடரர், நடாலிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.அவுஸ்ரேலிய,விம்பிள்டன்,அமெரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் ஃபெடரருக்கு, பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பட்டம் மட்டும் கானல் நீராக இருந்து வருகிறது.
இவர்களை தவிர செர்பியாவின் ஜோகோவிக்,ஸ்பெயினின் டேவிட்பெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் ஆகியோரும் பட்டத்துக்காக அணிவகுத்துள்ளனர். சில சமயம் முன்னணி நட்சத்திரங்கள் அடி சறுக்கலாம்.
மகளிர் பிரிவு:::நடப்பு சம்பியன் செர்பியாவின் அனா இவானோவிக், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ரஷியாவின் தினாரா சஃபினா உள்ளிட்ட முன்னிலை வீராங்கனைகள் களத்தில். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 10 மாதங்களாக விளையாடாமல் இருந்துவந்த ரஷியாவின் மரியா ஷரபோவாவும் சவாலுக்குத் தயார்.
நாளை முதல் விறுவிறுப்பான டென்னிஸ் தொடராக பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ்.வெல்லப்போவது யார்?சக்தி எப். எம் கேளுங்கள்....
0 comments:
Post a Comment