
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ஆரம்பத்தில் சரிவுகளை கண்டு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பின்னர் நடந்த போட்டிகளில் வெற்றிகளை சுவைத்து வந்தது. இனி வரும் போட்டிகளில் வெற்றியடைந்தால் மட்டுமே
சிக்கல் இல்லாமல் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்த நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டேன் என ஆஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.
டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அடுத்த போட்டிகளில் ஷேன் வோர்ன் விளையாடுவது சந்தேகம்.
கிம்பெர்லியில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற லீக் போட்டியில் டெக்கன் சார்ஜர்ஸிடம் ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. அதற்கு முந்தைய ஆட்டத்திலும் தோல்வியுற்றது. இதனால் பட்டியலில் பின்னடைவு கண்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். ஷேன் வோர்ன் விலகியுள்ளதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியின் தலைவரான கிரேம் ஸ்மித், இனிவரும் போட்டிகளில் தலைவராக பணியாற்றலாம் எனத் தெரிகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைவராகவும் பயிற்சியாளராகவும் இருக்கும் ஷேன் வோர்னின் ராஜஸ்தான் ராயல்ஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுமா....
0 comments:
Post a Comment