சானியாவுக்கு விரைவில் டும்.. டும்..

டென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். கடந்த 2005-ம் ஆண்டு நடந்த அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து குறுகிய காலத்தில் உலகம் முழுவதிலும் பிரபலமானார். இதையடுத்து சானியா மிர்சாவுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது.
அவர் டென்னிஸ் ஆடும் மைதானங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏன் தொலைக்காட்சிகளிலும் இவரது டென்னிஸ் ஆட்டத்தைப் பலரும்
கண்டு ரசித்தனர். ஒருபுறம் புகழின் உச்சிக்கு சென்ற சானியாமிர்சா மறுபுறம் மத ரீதியான சர்ச்சைகளுக்கும் உள்ளானார். ஆனால் விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி விட்டு டென்னிஸ் களத்தில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மகேஷ்பூபதியுடன் இணைந்து அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைத்தார்.
டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு விரைவில் திருமணமாம்.மாபிள்ளை சானியாமிர்சாவுடன் சிறு வயது முதலே படித்த சோரப்மிர்சா. சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
சானியா டென்னிசுக்கு முழுக்குப் போடுவாரா.......
0 comments:
Post a Comment