"எட்டப்படாத இலக்கு" 

தென்ஆப்ரிக்காவில் நடக்கும் ஐ.பி.எல். இருபது-20 தொடரில் அரையிறுதி வாய்பை இழந்து வெளியேறிய முதல் அணி கொல்கட்டா நைட்ரைடர்ஸ் இந்த அணி 14போட்டிகளில் விளையாடி 3போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு அடுத்து 2வது அணியாக மும்பை அணி அரையிறுதி வாய்ப்பை விட்டு வெளியேறி அதிர்ச்சியை தந்தது.பல சிறந்த வீரர்கள் இருந்தும் சிறப்பாக பிரகாசிக்க முடியவில்லை.
இந்த அணிகளுக்கு பிறகு கடந்த முறை ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த முறை அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் போனது. 14 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான், 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 13 புள்ளிகளுடன் தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த முறை ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த முறை அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் போனது. இதுவரை 14 லீக் போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான், 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 13 புள்ளிகளுடன் தொடரில் இருந்து வெளியேறியது. போட்டிகளில் தொடர் முழுவதும் சிரித்த முகத்துடன் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அணியின் சக உரிமையாளர் ஷில்பா ஷெட்டி தனது அணி தோல்வி அடைந்து, அரையிறுதி வாய்ப்பை கோட்டை விட்டதால் முதன் முதலாக கண்கலங்கினார்.
அதிரடியான பல வீரர்களை கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14போட்டிகளில் விளையாடி 7போட்டிகளில் வெற்றி கண்டது.14புள்ளிகளைப் பெற்றது.
தற்போது டில்லி, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. டெக்கான், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் 14 புள்ளிகள் பெற்றுள்ளன. டெக்கான், பெங்களூரு அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி வாய்ப்பை பெறும். இன்னொரு இடம் ரன்விகித அடிப்படையில் முடிவு செய்யப்படும். பஞ்சாப் அணியின் ரன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் அனேகமாக தொடரில் இருந்து வெளியேறி விட்டது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பெற முடியும்.
கிரிக்கெட்டில் முடிவுகள் இறுதி பந்து வரை.........
0 comments:
Post a Comment