
இந்தியாவில் நடந்த முதல் ஐ.பி.எல். தொடரில் கடைசி இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, இந்த முறை சாம்பியன் பட்டம் வென்று அதிர்ச்சி அளித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அணியின் தலைவரான அடம் கில்கிறிஸ்ட் தான். அதிரடியில் மிரட்டிய இவர், அணியை சிறப்பாக வழிநடத்திய பெருமையினையும் தனதாக்கினார்.
இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை எடுத்தது.144 ஓட்டங்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் கடுமையாகப் போராடி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.இதனால் 6ஓட்டங்களால் டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றிபெற்றது.
போட்டியின் நாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவரான அணில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டார்.
போட்டித் தொடரின் நாயகனாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தலைவரான அடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.
இத்தொடரில் 3 அரைச் சதம் உட்பட 495 ஓட்டங்களைக் குவித்த இவர், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதில் 29 சிக்சர்களும் அடங்கும்.
பெயரில் மட்டுமன்றி சாதித்தும் காட்டினார் கில்லி....
0 comments:
Post a Comment