" சறுக்கிய நடப்புச் சம்பியன்கள் "


தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள ஸ்வீடன் வீரர் ராபின் சோடர்லிங் மூன்றரை மணி நேரம் போராடி 6-2, 6-7 (2-7), 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் நடாலை வீழ்த்தினார்.
தொடர்ந்து 4முறை பிரெஞ்ச் சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ள நடால் தொடர்ந்து 31 ஆட்டங்களில் வென்று சாதனை படைத்தார்.
இப்போது இவரின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி.
நடாலின் தோல்வியால் ரோஜர் ஃபெடரருக்கு பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பட்டம் வெல்லும் வாய்ப்பு (எனது பார்வையில்) அதிகரித்துள்ளது. இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளபெடரர், பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பட்டம் வெல்லாதது எட்டாக் கனியே.இப்போது கனி கைக்கு அருகில் ரோஜர் ஃபெடரா!
மகளிர் பிரிவில் 4ஆவது சுற்றுடன் நடப்புச் சம்பியன் அனா இவானோவிக்கும் கண்ணீருடன் வீட்டுப் புறப்படார். இவர் 2-6, 3-6 என்ற நேர் செட்களில் பெலாரஸின் விக்டோரியா அசாரென்காவிடம் தோல்வியுற்றார்.
"ஆனைக்கும் அடி சறுக்கும் இதுதானோ"
0 comments:
Post a Comment