
ஒரு தனி மனிதராக தனது வெற்றிகளின் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவில் செஸ் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர் விஸ்வநாதன் ஆனந்த்.சாதனை வீரரான ஆனந்த் செஸ் ஆஸ்கர் விருதை ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.ரஷ்யாவின் செஸ் விளையாட்டு இதழான "64-செஸ் ரிவியூ' இதழ் 2008ம் ஆண்டுக்கான செஸ் ஆஸ்கார் விருதை அறிவித்தது. இந்த விருதை இம்முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பெற்றார். இதன்மூலம் இந்த விருதை ஆறாவது முறையாக (1997, 1998, 2003, 2004, 2007, 2008) கைப்பற்றி சாதித்தார். இவ்விருதை ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் அதிக பட்சமாக 11 முறை வென்றுள்ளார்.
பல விருதுகளை வென்று சாதனை படைக்கும் ஆனந்துக்கு இனிய வாழ்த்துக்கள்.
ஆனந்த் உங்கள் சாதனைப் பயணம் தொடரட்டும்.......
0 comments:
Post a Comment