ஆட்ட நாயகன் மீது சந்தேகம் :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடிவரும் குஜராத் வீரர் அமித் சிங் இந்த ஐபிஎல் போட்டியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பந்துவீசும் இரண்டாவது வீரராகியுள்ளார்.இதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கம்ரன் கான் இதேபோன்ற குற்றச்சாட்டில் சிக்கிய முதல் வீரராவர்.
செஞ்சுரியனில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்தப் போட்டியில் 19ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் 27 வயதாகும் அமித் சிங்.அணியின் வெற்றிக்கு இவரது பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. அந்த போட்டியில் பணியாற்றிய நடுவர்கள் போட்டி விதிமுறைக்கு எதிராக அமித் சிங் பந்துவீச்சு அமைந்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகத்திடம் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் நடுவர்களின் கருத்தை ஐபிஎல் தெரிவித்துள்ளது. இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள அமித் சிங் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது பந்து வீசும் முறை பரிசீலனையில்...முடிவு வரும் வரை போட்டிகளில் பங்கேற்கலாம்.....
0 comments:
Post a Comment