
இலங்கை அணிக்குக் கிடைத்த சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேல ஜெயவர்தன.டெஸ்ட் கிரிக்கெட்,ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.இன்று இவருக்கு பிறந்த நாள்.
102 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 8251ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.25 சதங்கள்.32 அரைச்சதங்கள்.142 பிடிகள். 3 வது விக்கெட்டுக்காக குமார் சங்கக்கராவுடன் இணைந்து 624ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.இது ஒரு உலக சாதனை ஆகும். 299ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 8042ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.10சதங்கள்,49 அரைச் சதங்கள்.159பிடிகள்.
கடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மகேல தலைமையில் இலங்கை அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி இரண்டாமிடத்தைப் பிடித்துக் கொண்டது.பல போட்டிகளில் இலங்கை அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த சாதனை வீரன் மகேல.
வாழ்த்துக்கள் மகேல......
0 comments:
Post a Comment