"குழப்படி எக்ஸ்பிரஸ் அவுட்"

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர். "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படும் அவர் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, போதை மருந்து பயன்படுத்துதல் போன்ற விவகாரங்களில் சிக்கி தனது பெயரை அடிக்கடி பேச வைத்தவர்.
சோயிப் அக்தர் அண்மைக்காலமாக சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.இம்மாதம் 21 முதல் 23 வரை நடைபெறும் பயிற்சிப் போட்டிகளில்விளையாடினால் அவரது உடற் தகுதி பற்றி இறுதி முடிவு எடுக்க முடியும் என பயிற்சியாளர் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் இந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அக்தர் தெரிவித்தார். இதன் காரணமாக அவரை 20-20 உலகக் கோப்பைக்கான அணியிலிருந்து விலக்கிக் கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அக்தருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் ராவ் இப்திகார் அணியில் இடம்பெறக் கூடும். உடற்தகுதி அல்லது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 2007 டிசம்பருக்குப் பிறகு 6 ஒரு தின போட்டிகளில் மட்டுமே அக்தர் பங்கேற்றுள்ளார். மொத்தமே 5 விக்கெட் மட்டுமே எடுத்தார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் இம்முறை 20-20 உலகக் கோப்பை போட்டிகளில் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வேதனைதான்... எப்ப வருவார் அக்தர் ..........
1 comments:
SUPER.... ARTICLE
GUD LUCK
Post a Comment