

முன்னணி ஐரோப்பிய கால்பந்தாட்ட கழக அணிகள் பங்கேற்கும் யு.ஈ.எப்.ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது. இதில் 2008ம் ஆண்டு சாம்பியன் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதின.
பார்சிலோனா அணி மூன்றாவது முறையாக சாதித்தது. பரபரப்பான இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.கிறிஸ்டியனோ ரொனால்டோ, ரூனிபோன்ற முன்னணி வீரர்கள் இருந்தபோதும் மான்செஸ்டர் அணி ஏமாற்றத்தையே சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி இத்தொடரில் மூன்றாவது முறையாக (1992,2006,2009) சாம்பியன் ஆனது.
குதிரைக்கு வால் இருக்கும் பார்த்திருக்கிறோம். ஆனால் இவ்வளவு நீளமான வால் உள்ள குதிரையா? என்ன குழப்பமா?இந்தக் குதிரையப் பாருங்க.இல்லை இந்தக் குதிரையின் வாலைப் பாருங்க. பார்த்தீங்களா? இந்தக் குதிரைதான் மிக நீளமான வாலுள்ள குதிரை......
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை ஆரம்பமாகிறது. ஜூன் 7-ம்தேதி வரை நடைபெற உள்ள இப் போட்டியில் முன்னணி வீர,வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
ஆடவர் பிரிவு::: தர வரிசையில் முதலாம் இடத்திலும் நடப்பு சம்பியனாகவும் திகழும் ஸ்பெயினின் ரஃபேல் நடால்,முன்னாள் உலகின் நம்பர்-1 வீரரான சுவிட்சர் லாந்தின் ரோஜர் பெடரர் இடையே கடும் போட்டி நிலவப்போகிறது.தொடர்ந்து 4முறை பிரெஞ்ச் சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ள நடால், 5 வது முறையாக சாதிக்க உள்ளார்.பிரெஞ்ச் பகிரங்க தொடரில் இதுவரை, நடால், சுவீடனின் ஜோர்ன் போர்க் ஆகியோர் தலா 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
களிமண் தரை போட்டிகளில் ராஜாவாகத் திகழும் நடாலுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வீரராக வலம் வருகிறார் பெடரர். இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளபெடரர், பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பட்டம் வெல்லாதது பெரும் ஏமாற்றம் தான். கடந்த 2006, 2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் பிரெஞ்ச் பகிரங்க இறுதி வரை முன்னேறிய பெடரர், நடாலிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.அவுஸ்ரேலிய,விம்பிள்டன்,அமெரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் ஃபெடரருக்கு, பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பட்டம் மட்டும் கானல் நீராக இருந்து வருகிறது.
இவர்களை தவிர செர்பியாவின் ஜோகோவிக்,ஸ்பெயினின் டேவிட்பெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் ஆகியோரும் பட்டத்துக்காக அணிவகுத்துள்ளனர். சில சமயம் முன்னணி நட்சத்திரங்கள் அடி சறுக்கலாம்.
மகளிர் பிரிவு:::நடப்பு சம்பியன் செர்பியாவின் அனா இவானோவிக், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ரஷியாவின் தினாரா சஃபினா உள்ளிட்ட முன்னிலை வீராங்கனைகள் களத்தில். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 10 மாதங்களாக விளையாடாமல் இருந்துவந்த ரஷியாவின் மரியா ஷரபோவாவும் சவாலுக்குத் தயார்.
நாளை முதல் விறுவிறுப்பான டென்னிஸ் தொடராக பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ்.வெல்லப்போவது யார்?சக்தி எப். எம் கேளுங்கள்....
பிரேசில் கால்பந்தாட்ட அணி என்றதும் நினைவுக்கு வரும் வீரர்கள் ரொனால்டோ, ரொனால்டினோ.ஆனால் இப்போது இவர்கள் அணிக்குள் இல்லை.
உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மற்றும் கான்ஃபெடரேஷன் கிண்ணப் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்களான ரொனால்டோ, ரொனால்டினோ ஆகியோர் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை.
ஜூன் 6ஆம் திகதி உருகுவே அணியையும் ஜூன் 10ஆம் திகதி பராகுவே அணியையும் சந்திக்கப்போகிறது பிரேசில்.
ரொனால்டோ,ரொனால்டினோ இருவரும் அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடவில்லை என்பதால் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லையாம்.பிரேசில் அணியின் பல வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்தவர்கள் இவர்கள்.
இனி எப்போது இவர்கள் களத்தில்...........
ஹாலிவுட் திரை உலகிற்கு இது ஒரு சோகமான செய்தி.......இங்கிலாந்தைச் சேர்ந்த லூசி கார்டன் பாரீஸில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். யார் இந்த லூசி....இது பலரது கேள்வி...இதற்கு விடை இதுதான்....... ஸ்பைடர்மேன் 3 படத்தில் ஒரு ரிப்போர்ட்டராக நடித்திருந்தார். இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்.....அவர் நடித்த காட்சிகள் உங்கள் கண்களுக்குள் ஓடிகொண்டிருக்கும்......அப்படித்தானே?
"லூசி" ஆரம்பத்தில் ஒருமாடல். 2001-ல் வெளியான 'பெர்ஃப்யூம்' அவரது அறிமுகப் படமானது. இதுவரை 12திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனது பிறந்த நாளுக்கு 2தினங்கள் இருக்கின்ற நிலையில் அவர் தற்கொலை புரிந்தமை ஹாலிவுட் சினி உலக ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. என்ன செய்வது விதியை யாரால் வெல்ல முடியும்?
ஹாலிவுட் சினியுலகம் நல்ல திறமையான ஒரு நடிகையை இழந்திருக்கிறது....................
"குழப்படி எக்ஸ்பிரஸ் அவுட்"
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர். "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படும் அவர் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, போதை மருந்து பயன்படுத்துதல் போன்ற விவகாரங்களில் சிக்கி தனது பெயரை அடிக்கடி பேச வைத்தவர்.
சோயிப் அக்தர் அண்மைக்காலமாக சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.இம்மாதம் 21 முதல் 23 வரை நடைபெறும் பயிற்சிப் போட்டிகளில்விளையாடினால் அவரது உடற் தகுதி பற்றி இறுதி முடிவு எடுக்க முடியும் என பயிற்சியாளர் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் இந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அக்தர் தெரிவித்தார். இதன் காரணமாக அவரை 20-20 உலகக் கோப்பைக்கான அணியிலிருந்து விலக்கிக் கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அக்தருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் ராவ் இப்திகார் அணியில் இடம்பெறக் கூடும். உடற்தகுதி அல்லது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 2007 டிசம்பருக்குப் பிறகு 6 ஒரு தின போட்டிகளில் மட்டுமே அக்தர் பங்கேற்றுள்ளார். மொத்தமே 5 விக்கெட் மட்டுமே எடுத்தார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் இம்முறை 20-20 உலகக் கோப்பை போட்டிகளில் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வேதனைதான்... எப்ப வருவார் அக்தர் ..........
ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் பொண்ணான மணித்துளிகள்.அப்படிப்பட்ட நேரத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.நேரத்தை அறிந்து கொள்ள உருவானதே கடிகாரம்.கைக்கடிகாரத்தில் நேரத்துடன் திகதி,திசை இவற்றை அறிந்து கொள்ளலாம் என்பதே ஒரு அதிசயமான விடயமாக மாறியது.
இன்றைய நவீன காலகட்டத்தில் கைக்கடிகாரத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அதிசயங்கள் தொடர்கின்றன.இப்போது இந்தக் கைக்கடிகாரங்களில் கையடக்கதொலைபேசி ப்ளூ டூத், ஐ பாட், கேமரா என பல வசதிகள்.
நேரம் பார்க்க கண்டுபிடிக்கப்பட கடிகாரங்களில் இப்படி இவ்வளவும் புகுந்து கொண்டால் நேரம் பார்க்க யாருக்கு மனம் இருக்கபோகிறது?இனி வரும் காலங்களில் என்னென்ன வரப்போகிறதோ............
இனி உங்கள் கையிலும் உலகம் வேகமாக அசையப்போகிறது....
உலகில் இன்று பலராலும் கொண்டாடப்படும் தினமாக அமைகிறது சர்வதேச அன்னையர் தினம். அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது. இதற்கு புராணங்களும் கதைகளும் சான்று பகர்கின்றன. பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள், கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் - கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களால் வணங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகும்.
கிரேக்க மக்களும் ரியா என்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வத்தை முழுமுதல் தாய்க்கடவுளாக வணங்கி வழிபட்டு வந்தனர்.ரோமானியர்களும் தங்களது தாய்-கடவுளுக்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ந் தேதி மூன்று நாள் விழா நடத்தினர்.
மத்திய- காலங்களில் வேறொரு வகையில் இது கொண்டாடப்பட்டது. குழந்தைகளும், பெண்களும் பொருள் ஈட்ட வெளியூருக்குச் செல்வதனால், ஒரே ஒரு விடுமுறை நாளில்தான் அவர்கள் தங்கள் தாய்மார்களைக் காண வாய்ப்பு கூடும். இந்த ஒரு தின விடுமுறையும் 40 நாள் நோன்பு விழாவின் நான்காவது ஞாயிறன்று என்று வழக்கமிருந்து வந்தது. இப்படித்தான் அன்னையர் தினம் என்ற ஒரு தினம் தொடங்கியது.
அன்னையர் தினம் என்ற தினத்தின் நிறுவனராக அமெரிக்காவைச் சேர்ந்த அனா ஜார்விஸ் என்ற பெண்மணியையே குறிப்பிட வேண்டும். இந்தப் பெண்மணி 1864ல் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவில் கிராஃப்டன் கிராமத்தில் பிறந்து வசித்து வந்தார்.அமெரிக்காவில் சிவில் யுத்தம் முடிவடைந்த நேரத்தில் அனா ஜார்விஸ்க்கு ஒரு வயது. அந்தக் காலகட்டத்தில் மேற்கு வேர்ஜினியாவில் குடும்பங்கள் இடையே பெரும் பகைமை இருந்து வந்தது. அனாவின் தாய் அன்னையர் தினம்' என்ற ஒன்று சில காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் கொண்டாடப்படும் என்று திரும்ப திரும்ப அனாவிடம் கூறியதாக தெரிகிறது.மேற்கு வேர்ஜினியாவில் குடும்பப் பகைமைகள் ஒழிய அன்னையர் தினம் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும் என அனாவிற்கு தோன்ற ஆரம்பித்தது.அனாவின் தாய் மரணமடைந்தபிறகு, அன்னா அன்னையர் தினம் ஒன்றை உருவாக்க உறுதிபூண்டார். அவரின் இந்த உறுதியை அறிந்து கிராஃப்டன் அமைச்சர் மே 12 1907ல் அமெரிக்காவில் முதல் அன்னையர் தின சேவையை ஆரம்பித்து வைத்தார்.அதன் பிறகு தேசிய அன்னையர் தினம் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடுவதாக தீர்மானித்தனர். 1909 ல் எல்லா மாநிலங்களும் இந்த சிறப்புத்தினத்தை கொண்டாட தொடங்கியது. மே 9 1914ல் ஜனாதிபதி வுட்ரோ வில்சன் மே மாதம் இரண்டாம் ஞாயிறை எல்லா மாநிங்களுக்குமான அன்னையர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.அனா தொடர்ந்து இது குறித்து கடிதங்கள் எழுதியும் பிரசாரங்கள் செய்தும் வந்தார். பிறகு அனாவே அகில உலக அன்னையர் தின சங்கம் ஒன்றை நிறுவினார். 1948ல் அன்னா இறப்பதற்கு முன்னதாக இந்த தினம் உலகம் முழுவதும் பரவியது. இதுதான் அன்னையர்தினம் பற்றிய ஒரு சுருக்கம். ம்ம் ......இது சுருக்கமா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.வரலாறு இதுதான். இப்படிப்பட்ட இந்த புனிதமான தினத்தில் அன்னையர் எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
கதாநாயகனாக, வில்லனாக, குணசித்திர நடிகராக தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டிற்கு மேலாக நடித்தும், சிறந்த தயாரிப்பாளராகவும் திகழ்ந்த நடிகர் பாலாஜி இன்று சென்னையில் காலமானார்.
மணாளனே மங்கையின் பாக்கியம், சகோதரி, படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா, என் தம்பி, ஆண்டவன் கட்டளை, போலீஸ்காரன் மகள் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் பாலாஜி. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
பில்லா,பலே பாண்டியா,படித்தால் மட்டும் போதுமா போன்ற படங்களில் பாலாஜியின் நடிப்பு மிகவும் ரசிக்கப்பட்டது.எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்த பல படங்கள் வெற்றி பெற்றன. தெலுங்கு,ஹிந்தி மலையாள படங்களை மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர்.இவரது படங்களில் பெரும்பாலும் கதாநாயகனின் பெயர் ராஜா எனவும், கதாநாயகியின் பெயர் ராதா எனவும் சூட்டப்படும். இவரது திருமண நாளான ஜனவரி 26-ல் இவர் தயாரித்த பெரும்பாலான படங்கள் வெளியிடப்பட்டன.
கமல், ரஜினியை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை தந்தவர் பாலாஜி.
மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் இவர் விளங்கினார். ராஜா,நீதி போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இலங்கையின் மகாராஜா நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த "தீ" திரைப்படத்தில் பாலாஜியின் பங்கு சிறப்பாக அமைந்தது.
ராஜா சாண்டோ மற்றும் ஃபிலிம் பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளன.
மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகராகத் திகழும் மோகன் லால் இவருடைய மருமகனாவார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜி அவர்கள் இன்று காலமானார்.
இவரது சில படங்களை பார்த்தவன் என்ற வகையில் இவரது நடிப்பில் உருவான காட்சிகள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இதை வாசிக்கும்போது உங்கள் மனதிற்குள்ளும் பாலாஜியின் நடிப்பில் உருவான சில காட்சிகள் அவரை ஞாபகப்படுத்தும்.
பாலாஜி நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது நடிப்பில் உருவான திரைப்படக் காட்சிகள் நம் கண்களுக்குள்ளும் மனதிற்குள்ளும் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும்....... பாலாஜி அவர்களுக்கு இதய அஞ்சலிகள்.......
இந்திய ஹாக்கி எழுச்சி பெறுமா?
இந்திய ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த ஜோஸ் பிராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு அதாவது 2011-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிவரை பயிற்சியாளராக பணியாற்றுவார்அதற்கடுத்த ஆண்டு லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பணியாற்றுவது குறித்து இப்போது சொல்ல முடியாது.இவரது பயிற்சியில் அணி சிறப்பாக வெற்றிகளைப் பெற்றால் சில நேரம் இவரது பயிற்சியாளர் பணி தொடரலாம் என்பது விளையாட்டு ஆர்வலன் அல்லது ரசிகன் என்ற வகையில் எனது கருத்து.உங்கள் கருத்தும் இப்படித்தானே...........
3 மாதத்துக்கு முன்னர் இந்திய ஒலிம்பிக் சங்கம் அவரை நேர்முகம் கண்டது. அப்போது தேவைகள் குறித்து அவரிடம் கேட்டறியப்பட்டன.
உதவியாளர்களாக 2 ஸ்பெயின் நாட்டினர் உட்பட 14 பேர்கொண்ட குழுவை கேட்டிருந்தார்.அணித் தேர்வு உட்பட அனைத்து விடயங்களிலும் தன்னிச்சையாக செயற்படுவது குறித்தும் கேட்டிருந்தார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனேகமாக அடுத்த வாரம் இந்தியா வந்து அவர் பொறுப்பை ஏற்கலாம்.
பிராசாவுக்கு மாதம் ஒன்றுக்கு நமது நாட்டு பண மதிப்பில் 15 லட்சம் ரூபாவுக்குமேல் சம்பளம் வழங்கப்பட உள்ளதாம்.....
இவரது பயிற்சியின் கீழ் இந்திய ஹாக்கி அணி அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு முன் எழுச்சி பெறுமா?
"பிராசா" இனி நீங்க" பண ராசா"