Pages

Thursday, August 27, 2009

பிதாமகனுக்காக....


கிரிக்கெட்டுக்காக பல பதிவுகளைத் தந்த நான்,இன்று ஒரு பதிவு தராவிட்டால் நீங்கள் என்மீது கொஞ்சம் கோபப்படுவீர்கள். ஏன் கோபப்படவேண்டும் என ஒரு சிலர் நினைக்கலாம்....

இன்று கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன்,கிரிக்கெட்டின் பிதாமகன் என அழைக்கப்படும் சார் டான் பிராட்மேன் பிறந்தநாள். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரரிவர்.கிரிக்கெட்டில் என்றென்றும் முதல்வன்.


தனது அறிமுகப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஐந்தாவது வீரராக களமிறங்கி முதல் இனிங்ஸில் 18 ஓட்டங்களை மட்டுமே பெற்றார்.இரண்டாவது இனிங்ஸில் ஒரு ஓட்டம் மட்டுமே.


தனது 2 ஆவது போட்டியில் கவனத்துடன் விளையாடி,முதல் இனிங்ஸில் 79 ஓட்டங்களைக் குவித்தார்.2 வது இனிங்ஸில் 112 ஓட்டங்களைக் குவித்து,இளம் வயதில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை வீரரானார்.


தனது 6 ஆவது போட்டியில் இரட்டைச் சதமடித்து அசத்தினார்.

கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு உரிமையுள்ள வீரர் பிராட்மேன்.1928 முதல்1948 வரையான காலப்பகுதியில் 52 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6996 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பிராட்மேன் கிரிக்கெட்டின் பிதாமகன்.........

4 comments:

Admin said...

நல்ல இடுகை உங்கள் பதிவை


இலங்கை தமிழ் பதிவர்கள் வலைப்பதிவில் இணைத்துள்ளேன்.

http://slnanparkal.blogspot.com

MAYURAN said...

நன்றி சந்ரு.

மயில்வாகனம் செந்தூரன். said...

////கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு உரிமையுள்ள வீரர் பிராட்மேன்.1928 முதல்1948 வரையான காலப்பகுதியில் 52 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6996 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.////

இந்தக் காலத்தில போல நிறையப் போட்டிகள் நடந்திருந்தால் அவர் எவருமே எட்டிப் பிடிக்க முடியாதளவு ஓட்டங்களை எடுத்திருப்பார் இல்லையா அண்ணா????

பிதாமகனுக்கு வாழ்த்துக்கள்....

மயூரன் அண்ணாவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்...

pirasanna said...

உங்கள் தளத்திற்கு புதியவன் நான்
உங்கள் பதிவுகள் சிறப்பாக இருக்கின்றன
வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் எழுதுங்கள்
ஆர்வமுடன் காத்திருக்கிறேன்

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates