இங்கிலாந்து - அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையே வரலாற்றுப் புகழ்மிக்க 'ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றமை நீங்கள் அறிந்ததே. 2 ஆண்டுகளுக்கொருமுறை இந்தப் போட்டி நடைபெறுகிறது.
65ஆவது 'ஆஷஸ்' டெஸ்ட் தொடர் கடந்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமானது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன. 2 போட்டிகள் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவடைந்திருந்தன. இதனால் தொடர் சமநிலை.ஆஷஸ் கோப்பையை வெல்வது யார் என்பதை தீர்மாணிக்கும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமானது. இங்கிலாந்து அணியின் சகல துறை வீரரான பிளின்டாப் விளையாடும் கடைசிப் போட்டி என்பதால் இன்னும் விறுவிறுப்பு அதிகமானது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்களும் அவுஸ்ரேலியா 160 ஓட்டங்களும் எடுத்தன. இங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ஓடங்களையெடுத்து தமது ஆட்டத்தை இடைநிறுத்தி 546 ஓட்டங்களை அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
கடினமான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 348 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையுமிழந்தது.
மைக் ஹஸி மட்டுமே சிறப்பாக துடுப்பெடுத்தாடி தனது 10ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து இறுதியாக ஆட்டமிழந்தார்.121 ஓட்டங்களைப் பெற்றார் ஹஸி. 197 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என்ற அடிப்படையில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
மைக் ஹஸி மட்டுமே சிறப்பாக துடுப்பெடுத்தாடி தனது 10ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து இறுதியாக ஆட்டமிழந்தார்.121 ஓட்டங்களைப் பெற்றார் ஹஸி. 197 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என்ற அடிப்படையில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருதைப் பெற, இங்கிலாந்து அணித் தலைவர் ஸ்டிராஸ்,அவுஸ்ரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் ஆகியோர் தொடர் நாயகன் விருதைப் பெற்றனர்.
இந்த வெற்றிக் களிப்புடன் இங்கிலாந்தின் பிளின்டாப் டெஸ்ட் கிரிக்கெட்டும் விடை கொடுத்தார்.
2005ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது மீண்டுமொரு டெஸ்ட் தொடரை பாண்டிங் தலைமையில் அவுஸ்ரேலிய அணி இழந்துள்ளது. இதற்கு முன் முர்டாக் தலைமையில் இரண்டு ஆஷஸ் தொடர்களை இங்கிலாந்தில்அவுஸ்ரேலியா இழந்தது 1890ஆம் ஆண்டு.
இந்த தோல்வியின் மூலம் அவுஸ்ரேலிய அணி முதன்முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை இழந்து 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் முதலிடத்திலிருந்த அவுஸ்ரேலியா முதன்முறையாக இப்படி வீழ்ச்சியடைந்துள்ளது.
வார்த்தைகளால் ஜாலம் காட்டும் அவுஸ்ரேலிய வீரர்கள் துடுப்பினால் ஜாலம் காட்டத் தவறிவிட்டனர்.
எதனை பேரின் தலைகள் உருளப்போகிறதோ....
0 comments:
Post a Comment