
நியூசிலாந்து அணித் தலைவரும் சுழற் பந்துவீச்சாளருமான டேனியல் வெட்டோரி, இலங்கை அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணித் தலைவர் சங்ககாரவை ஆட்டமிழக்க செய்ததன் மூலம்,டெஸ்ட் அரங்கில் தனது 300ஆவது விக்கெட்டைப் பதிவு செய்தார். இதன் மூலம் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
நியூசிலாந்து சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர் முன்னாள் வீரர் சேர் ரிச்சர்ட் ஹாட்லி.இவர் 431 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் மூலம் 300

பந்துவீச்சில் மட்டுமன்றி துடுப்பாட்டதிலும் இவர் 'கிங்' தான் டெஸ்ட் போட்டிகளில்(3 சதங்கள்,20அரைச்சதங்கள்)உட்பட 3,329 ஓடங்களையும் குவித்துள்ளார்.
இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள்,3 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 8ஆவது சகலதுறை வீரர் என்ற பெருமையைப் பெற்றார் வெட்டோரி.
இதற்கு முன் இந்தியாவின் கபில்தேவ், நியூஸிலாந்தின் சேர் ரிச்சர்ட் ஹாட்லி, அவுஸ்ரேலியாவின் ஷேன் வார்ன், இங்கிலாந்தின் இயன் பொத்தம், தென்னாபிரிக்காவின் பொலாக், பாகிஸ்தானின் இம்ரான்கான், இலங்கையின் சமிந்த வாஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் 8ஆவது வீரராக தற்போது இணைந்துள்ளார் வெட்டோரி.
தனது 18ஆவது வயதில் நியூசிலாந்து அணியில் அறிமுகமான இளவயது வீரரான இவர்,1997 இல் இங்கிலாந்து அணிக்கெதிரான தனது அறிமுகப் போட்டியில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தினார்.
2000 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா அணிக்கெதிராக ஒக்லன்டில் நடைபெற்ற போட்டியில் 87 ஓட்டங்களைக் கொடுத்து 7விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதுவே இவரின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதி.
சிறந்த சகலதுறை வீரராக வலம் வரும் வெட்டோரி இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் அதிகம்.
4 comments:
இலங்கை ஒருநாள் அணியில் ஏன் இன்னும் இந்திக்க டி சேரம் இணைக்கபடவில்லை. பின்புறத்தில் அரசியல் விளையாடுகிறதாமே உண்மையா
இது மிகவும் நல்ல பதிவு மயூரன் அண்ணா...
நமக்குத் தெரியாத சில புதிய சாதனை விபரங்களை தந்துள்ளீர்கள். அதற்காக, நன்றிகள் பல கோடி....
வாழ்த்துக்கள்.... உங்கள் பணி தொடரட்டும்....
நன்றி செந்தூரன்.
இலங்கன்...இந்திக டி சேரம் நல்ல வீரர்தான்.அவரிலும் பார்க்க இன்னும் திறமையான வீரர்களுக்கே வாய்ப்பு இல்லையே
Post a Comment