இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
லார்ட்ஸில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. ந்தத் தோல்வியிலிருந்து மீண்ட அவுஸ்ரேலியா ஹெடிங்லியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்டில் 3 நாட்களுக்குள் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இரு அணிகளும் 1-1 என வென்றுள்ள நிலையில் கடைசி டெஸ்ட் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
2006-07இல் ஏற்கெனவே தொடரை வென்றுள்ளதன் மூலம் இந்த டெஸ்டை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தாலே ஆஷஸ் கோப்பையை அவுஸ்ரேலியா தக்கவைத்துக் கொள்ளும்.
அதேசமயம், கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமானால், இந்த டெஸ்டை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.
ஹெடிங்லியில் வெற்றி பெற்ற அதே அவுஸ்ரேலிய அணியே கடைசி டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு அதிகம்.
இங்கிலாந்து அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ரவி போபராவுக்கு பதிலாக புதுமுக வீரர் ஜொனாதன் டிராட் சேர்க்கப்படுவார்.
காயம் காரணமாக 4ஆவது டெஸ்டில் விளையாடாத பிளின்டாஃப் இந்த டெஸ்டில் விளையாடுவார்.பிளின்டாஃப் விளையாடும் கடைசி டெஸ்ட் என்பதால் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடி அவருக்கு.
ஆஷஸ் யாருக்கு?
0 comments:
Post a Comment