இந்தப் பதிவு வித்தியாசமானது.இருவரைப் பாராட்டி விருது கொடுக்கப்போகிறேன்....அவர்கள் யார்?தொடர்ந்து வாசியுங்கள்..........
தற்போது உலகெங்கிலும் இருக்கும் நண்பர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர வலைப்பதிவுகள் துணை நிற்கின்றன.அந்த வகையில் நாள்தோறும் புதிய புதிய வலைப்பதிவுகள் அறிமுகமாகின்றது. தங்கள் சொந்தக் கருத்துக்களை சுயமாக வெளியிடுகிறார்கள். இது எதிர்காலத்தில் தமிழ் வலைப்பதிவுகள் சாதனை படைக்கப்போகின்றன என்பதையே எடுத்துக் காட்டுகின்றன. வாசிப்புக் குறைந்துவரும் இக்காலகட்டத்தில் இந்த வலைப்பதிவுகள்மூலமாக வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எனது கருத்து.
வலைப்பதிவுகளில் தற்போது உலவிவரும் "சுவாரஷ்யபதிவர் விருது" விடிவெள்ளி என்ற வலைப்பதிவை வைத்திருக்கும் பதிவுலக நண்பரான கார்த்திகன் கோபாலசிங்கம் மூலம் கடந்த ஜூலை கடைசி வாரம் எனது வலைப்பதிவுக்குக் கிடைத்திருந்தது. அந்த விருதினை 6 பேருக்குக் கொடுக்க வேண்டுமென்ற எழுதாத விதி ஒன்று இருக்கிறது. அந்த"சுவாரஷ்யபதிவர் விருதினை" 2 பதிவாளர்களுக்கு நான் கொடுக்கப்போகிறேன்.(எனக்கு வீசப்பட்ட பந்தினை இவர்களுக்கு நான் வீசப் போகிறேன்)
முதலாமவர் 'டயானா'.என்னுடன் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகப் பணி புரிபவர். இவர் இசை சம்பந்தமான பல பதிவுகளைத் தந்துள்ளார்.யாரும் அதிகம் தெரிந்திராத விடயங்களைத் தேடி அறிந்து பதிவுகளைத் தருவதில் வல்லவர். இவரது வலைப்பதிவு முகவரி http://wisdomblabla.blogspot.com/ நான் வலைப்பதிவில் பதிவுகளை பதிவிட முக்கிய காரணமாக அமைந்தவர் டயானா.எனக்கு "சுவாரஷ்யபதிவர் விருது" கிடைக்க முன்னர் இவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
இரண்டாமவர் 'ரமணன் சந்திரசேகரமூர்த்தி'. இவரும் ஊடகத்துறையோடு சம்பந்தப்பட்டவர்.ஒலிபரப்புத் துறையில் அறிவிப்பாளராக பணி புரிந்தவர்.தனது ஒலிபரப்புத் துறையில் ஏற்பட்ட அனுபவங்களை மட்டுமன்றி சிறந்த பதிவுகளைத் தனக்கேயுரிய மொழி நடையில் ஆழமாக சிந்திக்க வைக்கும வகையில் தருபவர். இவரது வலைப்பதிவு முகவரி http://ramanansblog.blogspot.com/. நல்ல பதிவுகளை தரும் ரமணன் இன்னும் பல பதிவுகளைத் தரவேண்டும்.
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். (பந்து வீசியாச்சு பிடித்திருப்பார்கள் என நினைக்கிறேன்) உங்கள் பதிவுகள் தொடரட்டும். அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
7 comments:
விருது பெற்ற உங்களுக்கும், விருது கொடுக்கப் பட்ட டயானா மற்றும் ரமணன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்....
வணக்கம் நண்பரே
இலங்கையிலிருந்து வலைப் பதிவு செய்யும் தங்களை கொழும்பு வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றி தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த மாத இறுதியில் நடாத்த திட்டமிட்டுள்ளோம், தங்களின் வருகை மற்றும் ஏனைய விமர்சனங்கள் கருத்துக்களை என்னுடைய மின்னஞ்சலுக்கோ(vanthidevan@gmail.com) அல்லது புல்லட்டின் மின்னஞ்சலுக்கோ (bullettheblogger@gmail.com) தெரிவிக்கவும்.
நன்றி
அன்புடன்
வந்தியத்தேவன்
பெருமையா இருக்கு மயு.....ckmayuran.blogspot.com/மூலமா உங்கள் திறமை இன்னும் வளரட்டும்......
fmsuman@gmail.com
நண்பர்களே....உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.இன்னும் பதிவுகள் தொடரும்.
விருது பெற்ற உங்களுக்கும், நீங்கள் விருது கொடுத்த இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பதிவுகள் ..
உங்கள் மனசு நல்ல மனசு... பெருமையா இருக்கு..உங்களுக்கும் மற்ற இருவருக்கும் எனது வாழ்த்துக்கள...தொடரட்டும் உங்கள் பதிவுகள் ..mayu
நண்பர்களே நன்றி.. உங்கள் கருத்துக்கள் என்றும் தேவை.
Post a Comment