சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெடரர் வசம்......
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடைபெற்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர்,இங்கிலாந்து வீரர் அன்டி முரே ஆகியோர் மோதினர் இதில் 4-6, 7-5, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் அன்டி முரேயை தோற்கடித்து பெடரர் சாம்பியன் ஆனார்.இது இவரது 7 ஆவது விம்பிள்டன் பட்டமாகும்.இதன் மூலம் விம்பிள்டன் பட்டத்தை அதிக (7) முறை வென்ற அமெரிக்காவின் பீட் சாம்ராஸின் சாதனையை சமன் செய்தார் பெடரர்.
விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும் (2003,2004,2005,2006,2007,2009,2011) அமெரிக்கா பகிரங்க பட்டத்தை 5 முறையும் (2004,2005,2006,2007,2008) அவுஸ்ரேலிய பகிரங்க பட்டத்தை 4 முறையும் (2004,2006,2007,2010) பிரெஞ் பகிரங்க பட்டத்தை ஒரு முறையும் (2009) கைப்பற்றியுள்ளார்.இதுவரை டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் (17) பட்டம் பெற்ற சாதனை வீரராகவும் பெடரர் உள்ளார்.
பெடரர் கடைசியாக 2010ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க பட்டத்தை பெற்றிருந்தார்.
முரே இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதுமில்லை.4 முறையும் இறுதிப் போட்டியில் தோற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.
பெண்கள்ஒற்றையர் பிரிவு
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும்,போலந்தின் அக்னீஸ்கா ராத்வன்ஸ்காவும் மோதினர்
முதல் செட்டை 6-1 என்ற நேர் செட்டில் தனதாக்கிய செரீனா 2ஆவது செட்டிலும் ஒரு கட்டத்தில் 4-2 என்று முன்னிலை பெற்றார் அதன் பின் செய்த தவறுகள் ராத்வன்ஸ்காவுக்கு சாதகமாக மாறியது.18 முறை செரீனா தவறுகள் செய்து ராத்வன்ஸ்காவுக்கு புள்ளிகளை தாராளமாய்க் கொடுத்ததால் இந்த செட்டை 5-7 என்ற கணக்கில் இழக்க நேரிட்டது.வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டை தன்வசமாக்கி,விம்பிள்டன் மகுடத்தை 5வது முறையாக சொந்தமாக்கினார். 6-1, 5-7, 6-2 என்ற நேர் செட்டில் ராத்வன்ஸ்காவை தோற்கடித்து சாம்பியனானார் செரீனா.
செரீனாவுக்கு இது 14ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர்களின் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கிறார்.1990ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை தனது 33 வயதில் மார்ட்டினா நவரத்திலோவோ கைப்பற்றிய பின் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமையும் 30 வயதான செரீனாவுக்கு கிடைத்துள்ளது.
இருவருக்கும் வாழ்த்துக்கள்.......

0 comments:
Post a Comment