சாதனையுடன் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ்...
ஆண்கள் ஒற்றையர்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்றது.ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிக் (செர்பியா) இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) மோதினர். அபாரமாக ஆடிய நடால்,6-4,6-3,2-6,7-5 என அசத்தி பிரெஞ்ச் பகிரங்க பட்டத்தை வென்றார்.
இதன்மூலம் 7ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் நடால் பெற்றார்.6 முறை பிரெஞ்ச் பகிரங்க பட்டத்தை வென்ற பிஜோர்ன் போர்க் என்பவரது சாதனையையும் நடால் முறியடித்தார்.மொத்தத்தில் இது அவரது 11ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.
இதற்கு முதல் பிரெஞ்ச் பகிரங்க பட்டத்தை 6 முறை (2005,2006,2007,2008,2010,2011) நடால் வென்றுள்ளார்.
விம்பிள்டன் பட்டத்தை 2 முறை (2008,2010),அமெரிக்க பகிரங்கபட்டத்தை ஒரு முறை (2010),அவுஸ்ரேலிய பகிரங்க பட்டத்தை ஒரு முறை
(2009) வென்றுள்ளார்.
பெண்கள் ஒற்றையர்:
பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2ஆம் நிலை வீராங்கனை ரஷ்யாவின் மரிய ஷரபோவாவும்,24ஆம் நிலை வீராங்கனை இத்தாலியின் சாரா இரானியும் மோதினார்கள்.எதிர்பார்த்தது போலவே அனுபவம் வாய்ந்த ஷரபோவா,வழக்கமான ஸ்டைலில் ஆக்ரோஷமாக அசத்தினார்.
ஒன்றரை மணி நேரம் நடந்த போட்டியின் முடிவில் ஷரபோவா 6-3,6-2 என்ற நேர் செட்டில் வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தை சூடினார்.2003 ஆம்ஆண்டு முதல் பிரெஞ்ச் பகிரங்க போட்டியில் விளையாடி வரும் ஷரபோவா பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.மொத்தத்தில் இது அவரது 4ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.முன்னதாக விம்பிள்டன் (2004),அமெரிக்க பகிரங்க (2006),அவுஸ்ரேலிய பகிரங்க (2008) கோப்பை வென்றார். இதன்மூலம் ஷரபோவா,4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில் பத்தாவது இடம் பிடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஷரபோவா,2008ஆம் ஆண்டு ஜூனுக்கு பிறகு மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
0 comments:
Post a Comment