அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்
ஆண்டின் முதலாவது பட்டமான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் மெல்பேர்னில் நடைபெற்று முடிந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திரங்கள் இம்முறையும் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக், இங்கிலாந்தின் ஆன்டி முரேயை எதிர்கொண்டார் கடந்த 2008 இல் நடந்த இறுதிப் போட்டியில் ஜோகோவிக், பிரான்சின் ஜோ-வில்பிரட் சொங்காவை வீழ்த்தி,தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
இம்முறை இத்தொடரின் அரையிறுதியில் உலகின் -2 ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கினார். தொடர்ந்து இரண்டாவது முறையாக (2010-2011) இறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்தின் ஆன்டி முரே,தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கி களமிறங்கினார்.
மிகவும் விறுவிறுப்பாய் நடந்த இறுதிப் போட்டியில் ஜோகோவிக் 6-4, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கடந்த ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் பெடரரிடம் தோல்வியடைந்த ஆன்டி முரே, தொடர்ந்து இரண்டாவது முறையாக தோற்று வெளியேறினார் கடந்த 1936 ஆம் ஆண்டு அமரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் தொடரில், இங்கிலாந்தின் பிரட் பெரி பட்டம் வென்றார்.அதன் பிறகு, கடந்த 75 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பட்டம் வென்றதில்லை.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதன் முறையாக கோப்பை வென்று சாதித்தார் உலகின் "நம்பர்-3' வீராங்கனையான பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ். இறுதிப் போட்டியில்,சீனாவின் நா லீயை எதிர்கொண்டார்.இறுதியில் கிளைஸ்டர்ஸ் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக அவுஸ்ரேலிய பகிரங்க சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கடந்த 2007ஆம் ஆண்டு கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன் லின்சை திருமணம் முடித்த கிளைஸ்டர்ஸ்,டென்னிலிசிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.2008 ஆண்டு பெண் குழந்தைக்குத் தாயானார்.2009 ஆண்டு மீண்டும் டென்னிசுக்கு திரும்பிய இவர் அமரிக்க பகிரங்க பட்டம் வென்றார்.
ஒரு குழந்தைக்குத் தாயான நிலையில் தொடர்ந்து அசத்தி வரும் இவர், முதன் முறையாக அவுஸ்ரேலியபகிரங்க பட்டத்தை வென்றுள்ளார்.
முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்குமுன்னேறிய சீன வீராங்கனை நா லி, இரண்டாமிடத்தைப் பிடித்தார்.
0 comments:
Post a Comment