மண் கவ்விய அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியாவுக்கெதிராக சிட்னியில் நடந்த 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி, "டக்வொர்த்-லீவிஸ்' முறைப்படி அவுஸ்ரேலியாவை 29 ஒட்டங்களால் தோற்கடித்தது. இதன் மூலம் அவுஸ்ரேலிய மண்ணில் முதன் முறையாக ஒரு நாள் தொடரை(2-0) கைப்பற்றி வரலாறு படைத்தது இலங்கை.
3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை வென்றது.இந்நிலையில் 2 ஆவது போட்டி சிட்னியில் நடந்தது.முதலில் துடுப்பெடுத்தாடியது இலங்கை.
தரங்க,டில்ஷான் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் முதல் விக்கெட்டுக்கு 98 ஒட்டங்கள் பெறப்பட்ட நிலையில், 47 ஒட்டங்களுடன் தில்ஷான் வெளியேறினார். சங்ககார 45 ஒட்டங்களைப் பெற்றார்
இந்தப் போட்டின் இடையிடையே மழை குறுக்கிட்டதால் இலங்கை அணியின் இனிங்சை 41.1 ஓவர்களுடன் நடுவர்கள் மட்டுப்படுத்தினர். அந்த வேளையில் 3 விக்கெட்டுக்கு 213 ஒட்டங்களை எடுத்திருந்தது இலங்கை. தரங்கா 86, மாத்யூஸ் 17 ஒட்டங்களை ஆட்டமிழக்காமால் பெற்றிருந்தனர்.
"டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி, அவுஸ்ரேலிய அணி 38 ஓவரில் 240 ஒட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளத் தவறிய அவுஸ்ரேலியா 37.4 ஓவரில் 210 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையுமிழந்து 29 ஒட்டங்களால் தோல்வியடைந்தது. இது சர்வதேச போட்டிகளில் அவுஸ்ரேலியஅணி தொடர்ந்து சந்திக்கும் 7 ஆவது தோல்வி.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி, அவுஸ்ரேலிய மண்ணில் முதன் முறையாக ஒரு நாள் தொடரை(2-0) வென்று மாபெரும் வரலாற்று சாதனை படைத்துள்ளது.இந்தத் தொடரில் இலங்கையணி சகல துறைகளிலும் மிகச் சிறப்பாகவே செயற்பட்டுள்ளது.
ஆஷஸ்,உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் அவுஸ்ரேலிய அணியின் நிலை பரிதாபமாகவே உள்ளது.எதிர்காலத்தில் அணியில் பல மாற்றங்கள் நிகழும் போல் தெரிகிறது.
0 comments:
Post a Comment