ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் பாரிசில் நடைபெறுகின்றன. இம்முறையும் பல அதிர்ச்சிகள்.
மகளிர் பிரிவு
மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியாவின் சமந்தா ஸ்டோசர், இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனை எதிர்கொண்டார். விறு விறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஷியோவோன், 6-4, 7-6 என்ற செட் கணக்கில் சமந்தா ஸ்டோசசரை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்ச் பகிரங்க, ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக இறுதி வரை முன்னேறிய இத்தாலியின் ஷியோவோன் கைப்பற்றும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமிது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல வீராங்கனைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மகளிர் இரட்டையர் பிரிவு
அமெரிக்காவின் செரீனா - வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் இரட்டையர் பிரிவில் 6- 2, 6- 3 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற மகளிர் இரட்டையர்என்ற சாதனையைபடைத்தனர் வில்லியம்ஸ் சகோதரிகள்.
ஆடவர் இரட்டையர் பிரிவு
ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில்,டானியல் நெஸ்டர் (கனடா)-நெனட் ஸிமோன்ஜிக் (சேர்ர்பியா) இணை 7-5,6-2, என்ற செட் கணக்கில்வெற்றி பெற, இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லூகாஸ் லூயி ஜோடி, தோல்வியைத் தழுவியது.
ஆடவர் பிரிவு
ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால், சுவீடனின் ராபின் சோடர்லிங் ஆகியோர் தற்போது மோதுகின்றனர்முதல் செட்டை 6-4 என தன்வசப்படுத்திய நடால் 02ஆம் செட்டிலும் 5-2 என்ற அடிப்படையில் முன்னிலையிளுள்ளதால் இந்தப் போட்டியில் பெரும்பாலும் வெற்றி பெறுவார்.
தன் வசப்படுத்படுத்தலாம்
ஆடவர் பிரிவிலும் எதிர்பார்க்கப்பட்ட பலரும் சறுக்கலை சந்தித்தனர்
0 comments:
Post a Comment