சூடு பறக்குமா
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று பாரிசில் ஆரம்பமாகிறது. இது,இந்த ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடராகும்.
ஆடவர் பிரிவு:
நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் மீண்டும் சாதிக்க வாய்ப்புகள் அதிகம். இவருக்கு பதிலடி கொடுக்க "களிமண் கள மன்னன்' ரபேல் நடால் தயாராகிறார்.
இதுவரை,16 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரர், மற்றொரு முறை சாதிக்க வாய்ப்புக்கள் அதிகம்.களிமண் களத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் நடால், இதுவரை பிரெஞ்ச் பகிரங்க போட்டிகளில் 4 முறை (2005,2006,2007,2008) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இம்முறை வெற்றி பெறும் பட்சத்தில், பிரெஞ்ச் பகிரங்க போட்டிகளில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார் .
இவர்களைத் தவிர சேர்பியாவின் ஜோகோகோவிக், இங்கிலாந்தின் அன்டி மரே ஆகியோரும் சாதிக்கலாம்.
மகளிர் பிரிவு:
மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் சிறிய ஓய்வுக்குப் பின், சர்வதேச டெனிசுக்குத் திரும்பியுள்ள பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின், பெண்கள் பிரிவில் இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 4 முறை (2003,2005,2006,2007) பிரெஞ்ச் பகிரங்க பட்டம் வென்றுள்ளார் ஹெனின்.
அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்,செரினா வில்லியம்ஸ் சகோதரிகள், நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் குஸ்னட்சோவா, டிரானா சபினா, மரியா ஷரபோவா ஆகியோரும் சாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஜூன் 06 ஆம் திகதி வரை போட்டிகள் இடம்பெறும்.
டென்னிஸ் ரசிகர்களுக்கு இது பெருவிருந்து
தவிர்க்க முடியாத காரணங்களால் பதிவுலகில் சில மாதங்கள் என்னால் பதிவிட முடியவில்லை . மிக விரைவில் விரிவான ஆக்கங்களை
எதிர்பாருங்கள்.......
0 comments:
Post a Comment