இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
லார்ட்ஸில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. ந்தத் தோல்வியிலிருந்து மீண்ட அவுஸ்ரேலியா ஹெடிங்லியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்டில் 3 நாட்களுக்குள் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இரு அணிகளும் 1-1 என வென்றுள்ள நிலையில் கடைசி டெஸ்ட் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
2006-07இல் ஏற்கெனவே தொடரை வென்றுள்ளதன் மூலம் இந்த டெஸ்டை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தாலே ஆஷஸ் கோப்பையை அவுஸ்ரேலியா தக்கவைத்துக் கொள்ளும்.
அதேசமயம், கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமானால், இந்த டெஸ்டை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.
ஹெடிங்லியில் வெற்றி பெற்ற அதே அவுஸ்ரேலிய அணியே கடைசி டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு அதிகம்.
இங்கிலாந்து அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ரவி போபராவுக்கு பதிலாக புதுமுக வீரர் ஜொனாதன் டிராட் சேர்க்கப்படுவார்.

காயம் காரணமாக 4ஆவது டெஸ்டில் விளையாடாத பிளின்டாஃப் இந்த டெஸ்டில் விளையாடுவார்.பிளின்டாஃப் விளையாடும் கடைசி டெஸ்ட் என்பதால் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடி அவருக்கு.
ஆஷஸ் யாருக்கு?
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் கோலூன்றிப்பாய்தல் போட்டியில் ரஷ்யாவின் எலினா இசின்பயேவா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பீஜிங் ஒலிம்பிக்கில் 5.05 மீ உயரம் தாண்டி கோலூன்றிப்பாய்தல் மகாராணியாக முடிசூடிக் கொண்ட இவருக்கு இத்தொடரில் வெண்கலம் பதக்கம் கூட கிடைக்கவில்லை.3 முறையும் இலக்கை எட்ட முடியாமல் பதக்கம் பெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.
4.75 மீ. தாண்டிய போலந்தின் அன்னா ரொகோவ்ஸ்கா தங்கப்பதக்கதைப்பெற 4.65 மீ தாண்டிய அமெரிக்காவின் செல்சியா ஜான்சன் வெள்ளிப்பதக்கதைப்பெற்றார். வெண்கலத்தை போலந்தின் மோனிகா பிரக் தட்டி சென்றார்.

இதேவேளை,இந்தப் போட்டியில் சங்ககாரவின் விக்கெட்டைக் கைப்பற்றிய சயீத் அஜ்மல், சங்ககாரவைப் பார்த்து ஆடுகளத்தை விட்டு செல்லுமாறு சைகை செய்ததால் அவரது போட்டித் தொகையில் 15% அபராதம் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
கமல் கதாநாயகனாக நடித்து முதல் வெளிவந்த படம் "பட்டம் பூச்சி"." மேல் நாட்டு மருமகள்" படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இதே படத்தில் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமான மும்பை நடிகை வாணியை காதலித்து மணமுடித்தார் கமல்.25 படங்கள் நடித்த பின்னும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் "அபூர்வ ராகங்கள்" படத்தில் நடிக்க இயக்குனர் பாலச்சந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் நடித்த பின்னர் இவர் எங்கோ சென்று விட்டார்.