நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,5 போட்டிகளைக் கொண்ட தொடரை 4-0 எனக் கைப்பற்றியுள்ளது. இது பங்களாதேஷ் அணியின் மாபெரும் வரலாற்று வெற்றி.
பங்களாதேஷ் சென்ற நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.2ஆவது ஒருநாள் போட்டி மட்டும் மழை காரணமாக நடைபெறவில்லை. ஏனைய அனைத்துப் போட்டிகளிலும் அபார திறமைகளை வெளிப்படுத்தினர் பங்களாதேஷ் வீரர்கள்.நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பலரும் ஓட்டங்களைப் பெறத் தடுமாறினார்.
தொடரை வென்ற பங்களாதேஷ் அணி, நியூசிலாந்துக்கெதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.இதற்கு முன்னர் இவ்விரு அணிகளும் 4 முறை (2004,2007-2009) ஒருநாள் தொடரில் பங்கேற்றன. இதில் நியூசிலாந்து அணி அனைத்திலும் தொடரை வென்றது.
அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகள் ஆசிய நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் தொடர் தோல்விகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்காலத்தில் அணியில் பல மாற்றங்கள் நிகழலாம்.......
1 comments:
உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில் பங்களாதேஷ் அணியின் எழுச்சி பாராட்டுக்குரியது... ஆசியாவில் இடம்பெறும் இந்த போட்டிகளில் பங்களாதேஷ் அணி ஏனைய அணிகளுக்கு சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
Post a Comment