Pages

Saturday, September 12, 2009

அதிரடிக்கு சனத்...

சனத் இல்லாத இலங்கையணியை நினைத்துப் பார்த்தல் கவலைதான்.சனத்தின் அதிரடிதான் இலங்கையணியின் முதுகெலும்பு.சனத் ஓட்டங்களைக் குவிக்காத போட்டிகளில் இலங்கையணியின் நிலை நீங்கள் அனைவரும் அறிந்ததே.நான் சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.


40 ௦வயதைக் கடந்தும் இன்று அதிரடியாக ஆடி 98ஓட்டங்களை வேகமாகப் பெற்றார்.இன்னும் 2 ஓட்டங்களைப் பெற்றிருந்தால்,தனது சாதனையை முறியடித்து மீண்டுமொரு சாதனை படைத்திருக்கலாம்.அது என்ன சாதனை....அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை மீண்டும் புதுப்பித்திருக்கலாம்.


இந்திய அணிக்கெதிராக தம்புள்ளையில் 28-௦01-2009 இல் நடைபெற்ற போட்டியில் சனத் (39 வருடங்களும் 212 நாட்களும்) சதமடித்தார். இதுதான் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதி கூடிய வயதில் வீரரொருவர் சதமடித்த சந்தர்ப்பம். இன்று சதமடித்திருந்தால் சனத்துக்கு வயது 40 ௦வருடங்கள்74 நாட்கள். இன்று இன்னுமொரு சாதனைக்கு உரித்தானார் சனத்.ஒரு மைதானத்தில் கூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையே அது.ஆர்.பிரேமதாச மைதானத்தில் சனத் இதுவரை 70 ௦போட்டிகளில் 2478 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இதற்கு முதல் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம்.இவர் ஷார்ஜா மைதானத்தில் 59 போட்டிகளில் 2464 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
சாதனை நாயகனை அண்மையில் சக்தி fm கலையகத்தில் சந்தித்தபோது....

இன்றைய போட்டியின் கதாநாயகனாக இறுதியில் தனது பெயரைப் பதித்துக் கொண்டவர் மத்யூஸ்.

மத்யூஸ் துல்லியமாகப் பந்து வீசி இந்திய அணியின் 6 விக்கெட்டுகளை 20 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து சாய்த்தார். இது அவரது சிறந்த பந்துவீச்சுப்பெறுதி மட்டுமன்றி ஆர்.பிரேமதாச மைதானத்தில் பெறப்பட சிறந்த பந்துவீச்சுப் பெறுதியுமாகும்.அத்துடன் இந்திய அணிக்கெதிராக இலங்கை வேகப்பந்துவீச்சாளரொருவர் பெற்ற சிறந்த பந்துவீச்சுப் பெறுதி.இது ஒருநாள் சர்வதேச போட்டியோன்றில் பெறப்பட்ட 19 ஆவது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியுமானது.தனது 12 ஆவது போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்மத்யூஸ்.

முரளி,கேல,ஹ்ரூப்,மாலிங்க,மென்டிஸ் போன்ற M வரிசை வீரர்களில் இப்போது த்யூஸ்.சிறந்த சகலதுறை வீரராகப் பிரகாசிக்கும் மத்யூஸ் இனி வரும் போட்டிகளிலும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் இலங்கை அணியில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம்.


மும்முனை சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் 3 ஆவது போட்டியில் 139 ஓட்டங்களால் தோல்வி கண்டது இந்தியா.இலங்கை மண்ணில் இந்தியா சந்தித்த மிகப் பெரும் தோல்வி இது.

இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு....

6 comments:

maruthamooran said...

மயூரன்……. தங்களின் ஏக்கம் சரியானதென்று நினைக்கிறேன்… சனத் இல்லாத இலங்கை அணியை நினைத்துப் பார்ப்பது கஸ்ரமானதே…… ஆனால், 40 வயதை கடந்து விட்ட சனத் இன்னும் எவ்வளவு காலம் விளையாட முடியும். அவர் வழிவிட்டு சென்றாலே மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்டக்காரரை இலங்கை அணி பெற்றுக்கொள்ளும்.. அதுதான் எதிர்காலத்துக்கு நல்லது. மற்றப்படி சனத்தின் இழப்பை விரைவில் ஈடுசெய்ய முடியாது என்பது உண்மையே.

வந்தியத்தேவன் said...

மயூரன் ம்ம் சனத் நினைத்திருந்தால் அந்த சாதனையை நேற்று செய்திருக்கலாம், அவர் தன்னலத்திற்காக விளையாடுவதில்லை என்பது மீண்டும் வெளிச்சமாகத் தெரிந்துள்ளது. கிரிக்கெட்டில் இல்லை எல்லாத் துறைகளிலும் Mல் பெயர் தொடங்குபவர்கள் கில்லாடிகள் தான் (உள்குத்து புரிகிறதா)ஹிஹி

vaytheky said...

superb anna keep itup

MAYURAN said...

மருதமூரான்....நீங்கள் சொல்வது சரி.சனத் போன்ற வீரரை இப்போதைக்கு உருவாக்க முடியாது....

MAYURAN said...

வந்தியத்தேவனே.....புரிகிறது அர்த்தம். உங்கள் பெயரின் ஆரம்ப எழுத்தும் M தானே....

MAYURAN said...

நன்றி வைதேகி...

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates