மும்முனை ஆரம்பம்
இலங்கை,இந்திய,நியூஸிலாந்து அணிகள் மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை ஆரம்பமாகிறது.ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் தலா ஒருமுறை மோதும்.இதில் வெற்றியைப் பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இலங்கை
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள்(சனத்,டில்ஷான்)அதிரடியாக ஓட்டங்களைப் பெற்றால் இலங்கையணி கூடுதல் ஓட்டங்களைப் பெறலாம்.பந்துவீச்சில் சிறப்பாக மிளிரும் அதேவேளை,துடுப்பாட்டத்தில் நடுவரிசை வீரர்கள் விரைவாக ஆட்டமிழப்பதே இலங்கையணியின் பலவீனம்.சனத்,மஹேல,சங்ககார,டில்ஷான் இவர்கள் சாதிக்காவிட்டால் இலங்கையணியின் நிலை மோசம்தான்.
நியூஸிலாந்து அண்மையில் நடைபெற்ற இரண்டு 20௦-20௦ போட்டிகளிலும் இலங்கையணியைத் தோற்கடித்த இளம் வீரர்களைக் கொண்ட நியூஸிலாந்து பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்குகிறது.அதே வேகத்தில் ஒருநாள் போட்டியிலும் தனது வெற்றியைத் தொடரலாம் நியூஸிலாந்து.டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலடைந்த தோல்விக்குப் பரிகாரம் தேடும் முனைப்போடு நியூஸிலாந்து வீறு கொண்டு எழலாம்.
இந்தியா
தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது. இலங்கை,இங்கிலாந்து,நியூசிலாந்து,மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடர்களை வென்று எழுச்சி பெற்றுள்ளது.டிராவிட் 2 வருடங்களுக்குப் பின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.சச்சின் அணிக்கு மீண்டும் வருவது இன்னும் அணிக்குப் பலத்தைக் கொடுக்கும்.துடுப்பாட்டம் பந்துவீச்சு,களத்தடுப்பு மூன்றிலும் சிறப்பாக விளங்கும் இந்திய அணி சாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
கடைசியாக இந்திய அணி1998இல் நடந்த மும்முனை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.அதன் பின் இலங்கையில் நடந்த பல நாடுகள் மோதிய 5 ஒரு நாள் தொடர்களில் இந்தியா பங்கேற்றது.இதில் ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் வெற்றி பெறவில்லை. இம்முறை வெற்றி பெற்றால் 11 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் பெற்ற வரலாற்று வெற்றியாக மாறலாம்.
சனத் சாதனை
சனத் இந்தத் தொடரில் உலக சாதனை ஒன்றைப் படைக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.ஒரு மைதானத்தில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையே அது.பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான 'இன்சமாம்' தான் தற்போதுவரை இந்த சாதனைக்கு சொந்தக்காரன்.இவர் ஷார்ஜா மைதானத்தில் 2464 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இந்த சாதனயை முறியடிக்க சனத்துக்கு இன்னும் 91 ஓட்டங்கள் தேவை.
சனத் கடைசியாக விளையாடிய 19 போட்டிகளில் 514 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளார்.சனத்தின் அதிரடி மீண்டும் தேவை.
பிரேமதாச மைதானம் பிரேமதாச மைதானத்தில் இதுவரை 90 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்திய அணியே இலங்கை அணிக்கெதிராக கூடுதல் ஓட்டங்களைப் பெற்றுள்ளது.2009 ஆம் ஆண்டு 5 விக்கெட் இழப்புக்கு 363 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.சனத்,மஹேல,சங்ககார ஆகியோர் இந்த மைதானத்தில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.பந்துவீச்சில் முரளி 69 விக்கெட்டுகளையும் சனத் 57 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முன்னணியிலுள்ளனர்.
முடிசூடப்போவது இலங்கையா,இந்தியாவா, நியூஸிலாந்தா....
5 comments:
ம்ம்ம் ஆனால் ஒவ்வொரு அணியும் ஒரு தடவை மோதுவது என்பது கொஞ்சம் சிக்கல். ஏனென்றால் ஒரு சின்ன தப்பே வெற்றியை மற்ற அணிக்கு கொடுத்துவிடும். ஆனாலும் எப்படியும் இன்ரெஸ்டாக இருக்கும். மூன்று அணிகளும் பலமாகத் தான் இருக்கின்றன.
தோல்வியடைந்தால் ஒரு தோல்வியென்று கொஞ்சம் ஆறுதலடையலாம்தனே.....
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
//சனத் கடைசியாக விளையாடிய 19 போட்டிகளில் 514 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளார்.சனத்தின் அதிரடி மீண்டும் தேவை.//
நிதர்சனமான வரிகள் சனத் இன்றைக்கு தடுமாறியதைப் பார்த்தபோது பாவமாக இருந்தது. அவரினால் இன்சமாமின் சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை.
Post a Comment