11 வருடங்களின் பின்
இலங்கை,இந்திய,நியூஸிலாந்து அணிகள் பங்குபற்றிய மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை,இந்திய அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி,தனது அணி முதலில் துடுப்பெடுத்தாட விரும்பினார்.சச்சினும் ட்ராவிட்டும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் நுழைந்து ஓட்டங்களைக் குவித்தனர்.இருவரும் முதல் விக்கெட்டுக்காக 95 ஓட்டங்களைப் பெற்றனர். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமிழந்து 319 ஓட்டங்களைப் பெற்றது.

சச்சின்
சச்சின் டெண்டுல்கர் 91 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த சதம் ஒருநாள் சர்வதேச போட்டியில் இவர் அடிக்கும் 44ஆவது சதம்.அது மட்டுமன்றி இலங்கையணிக்கெதிராக 8 வது சதம்.

ஆர்.பிரேமதாச மைதானத்தில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் சச்சினுக்கு சொந்தமானது. இந்த மைதானத்தில் சச்சின் 27 போட்டிகளில் 4 சதமடங்கலாக 1096 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் 1998ஆம் ஆண்டு நடந்த மும்முனைப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதில் சச்சின் சதமடித்திருந்தார்.அதே பாணியில் 11வருடங்களின் பின் இப்போது மீண்டும் சதமடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
சச்சின்..... சாதனை நாயகன்....
1 comments:
இலங்கை அணியுடன் இந்திய அணி இலங்கையில் பங்குபற்றிய கடைசி 3 ஒருநாள் தொடர்களை (மும்முனை உட்பட) எடுத்துப் பாருங்கள். கொழும்பில் நடைபெற்ற போட்டிகளில் நாணயச்சுழற்சி என்ற ஒரு மாபெரும் அதிர்ஷ்ரம் இந்தியா பக்கம் இருந்திருக்கிறது....
Post a Comment