ஹர்பஜனின் தூஸ்ரா விமான நிலையத்திலுமா ??????
சாதாரணமானோர் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கினால் அந்த விடயங்கள் வெளிலயுலகுக்கு வரவே வராது.ஆனால் பிரபலங்கள் ஏதாவது சர்ச்சைகளில் மாட்டினால் உலகெல்லாம் பரவிவிடும்.அதுவும் கிரிக்கெட் வீரர்கள் சர்ச்சைகளில் சிக்கினால் அதோ கதிதான். இப்போது புதிய சர்ச்சை ஒன்றில் வசமாய் மாட்டுப்பட்டிருகிறார் ஹர்பஜன் சிங்.
ஹர்பஜன் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2007 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய வீரர் சைமன்ட்ஸை குரங்கு என திட்டி அதன் பின் விசாரணைகளை எதிர்கொண்டமையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.2008ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின்போது தனது சக வீரரான ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் அறைந்து,பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.இதற்குத் தண்டனையும் அனுபவித்தார்.இப்போது இன்னுமொரு சர்ச்சை......இலங்கையில் நடைபெறும் மும்முனைத் தொடரில் பங்குபற்ற வருவதற்காக பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஹர்பஜன், தனது காரிலிருந்து உடைமைகளை எடுப்பதற்குள் ஒரு புகைப்படப்பிடிப்பாளரின் கேமரா அவரது தலையில் தவறுதலாக(சாதுவாக எமது பார்வையில்-காட்சியைப் பார்த்தபோது) இடித்து விட்டது. இதனால் கோபமடைந்த ஹர்பஜன் புகைப்படப்பிடிப்பாளரை நோக்கி விட்டார் குத்து.
ஹர்பஜனின் தூஸ்ரா புகைப்படப்பிடிப்பாளரை நோக்கி பலமாக....
ஹர்பஜனின் இந்தக் குத்து தூஸ்ராவைவிட மோசமாகவே தென்பட்டது அந்த கட்சியைப் பார்த்தபோது. இதை பார்த்த ஏனைய படப்பிடிப்பாளர்களும் புகைப்படப்பிடிப்பாளர்களும் சும்மா இருப்பார்களா?தாம் எதிர்பாராத இந்த அரிய காட்சியைத் தமது கேமராவுக்குள் பத்திரமாகப் பதித்துக்கொண்டனர். இப்போது கிரிக்கெட் உலகில் இதுதான் பரபரப்பு........ கொஞ்ச நாட்களுக்கு ஹர்பஜன் பேச்சுதான் கிரிக்கெட்டில்.
ஹர்பஜன்....அதிகம் கோபப்படாதீர்....கோபத்தால் சாதிக்க முடியாது உமக்கு.....
சர்ச்சை நாயகனுக்கு இப்போது வந்திருப்பது அணித் தலைவர் ஆசை. இப்போதைக்கு நிறைவேறாது இந்தப் பேராசை.......
1 comments:
அண்மையில் ஹர்பயன் போக்குவ்ரத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தவர். சர்ச்சைகளும் ஹர்பயனும் பிரிக்கமுடியாதவை.
Post a Comment