சினிமாவில் பாடவேண்டுமென்பது பலரது கனவு.அப்படிப்பட்ட கனவோடு வந்து பல இனிய பாடல்களைத் தந்து இசை ரசிகர்களை தன் வசீகரக் குரலால் கவர்ந்தவர் பாடகி சின்மயி.
இன்று பாடகி சின்மயின் 25 ஆவது பிறந்த நாள்.அதற்காக இந்தப் பதிவு

முதல் பாடலே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்க,இன்று வரை தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களின் டைட்டில் பாடல்களையும் பாடியுள்ளார்.

பாடகியாக மட்டுமன்றி தொலைக்காட்சி,வானொலி அறிவிப்பாளராகவும் தனது குரலால் பலரையும் கவர்ந்தவர் என்றால் மிகையில்லை.
லதா மங்கேஷ்கர்,சித்ரா,ஜானகி ஆகியோரின் பாடல்கள் அதிகம் பிடிக்கும் எனக் கூறும் சின்மயி,நல்ல பாடகியாக தனது இசைப் பயணம் தொடரவேண்டுமென்பதே இலட்சியம் எனக் கூறுகிறார்.
வாழ்த்துக்கள் சின்மயி...உங்கள் இசைப் பயணம் தொடரட்டும்...
3 comments:
//இசை இளவரசிக்கு ////
இது கொஞ்சம் ஓவரு. அவ்ளோ பாடல்கள் பாடர மாதிரீ தெரியலியே?
இருந்தாலும், பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்னையும் மிகவும் கவர்ந்த பாடகி சின்மயி. நான் இவரது முதல் பாடலான நெஞ்சில் ஜில் ஜில் பாடலை பல தடவைகள் கேட்டுள்ளேன். வாழ்த்துக்கள் இவரிற்கு இவர் இன்னும் பல பல சிகரங்களை தொட!
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே...
Post a Comment