Pages

Sunday, October 17, 2010

பந்தாடப்பட்ட நியூசிலாந்து

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,5 போட்டிகளைக் கொண்ட தொடரை 4-0 எனக் கைப்பற்றியுள்ளது. இது பங்களாதேஷ் அணியின் மாபெரும் வரலாற்று வெற்றி.


பங்களாதேஷ் சென்ற நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.2ஆவது ஒருநாள் போட்டி மட்டும் மழை காரணமாக நடைபெறவில்லை. ஏனைய அனைத்துப் போட்டிகளிலும் அபார திறமைகளை வெளிப்படுத்தினர் பங்களாதேஷ் வீரர்கள்.நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பலரும் ஓட்டங்களைப் பெறத் தடுமாறினார்.

தொடரை வென்ற பங்களாதேஷ் அணி, நியூசிலாந்துக்கெதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.இதற்கு முன்னர் இவ்விரு அணிகளும் 4 முறை (2004,2007-2009) ஒருநாள் தொடரில் பங்கேற்றன. இதில் நியூசிலாந்து அணி அனைத்திலும் தொடரை வென்றது.


பங்களாதேஷ் அணிக்கெதிரான 5ஆவது போட்டியில் தோல்வியடைந்துள்ள நியூசிலாந்து, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 300ஆவது தோல்வியைப் பதிவு செய்தது.இதன்மூலம் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் வரிசையில் 3ஆவது இடத்தைப் பிடித்தது. முதலிரண்டு இடங்களில் இந்தியா (351 தோல்வி), பாகிஸ்தான் (317 தோல்வி) அணிகள் உள்ளன.

அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகள் ஆசிய நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் தொடர் தோல்விகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்காலத்தில் அணியில் பல மாற்றங்கள் நிகழலாம்.......

1 comments:

Nishan Thirumalaisami said...

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில் பங்களாதேஷ் அணியின் எழுச்சி பாராட்டுக்குரியது... ஆசியாவில் இடம்பெறும் இந்த போட்டிகளில் பங்களாதேஷ் அணி ஏனைய அணிகளுக்கு சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates