Pages

Wednesday, November 3, 2010

ஓய்ந்தது வேகம்....

ஓய்ந்தது வேகம்....

தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மகாயா நிடினி,சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கறுப்பினத்தை சேர்ந்த நிடினி, கடந்த 12 ஆண்டுகளாக தென்னாபிரிக்க அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்தவர்.அண்மைக் காலமாக தொடர் உபாதைகள்,புதிய வீரர்களின் வரவுகளால் அணியில் இடம் கிடைக்காமையால், இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது திறமையாலும் அனுபவத்தாலும் பல்வேறு தடைகளைத் தாண்டி தனது அசுர வேகப்பந்து வீச்சால் பல விக்கெட்டுக்களை சாய்த்து தனது அணிக்குப் பெருமை தேடிக்கொடுத்த வீரர் மக்காயா நிடினி(Makhaya Ntini) தென்னாபிரிக்க அணியில் கடந்த 12 வருடங்களாக இடம்பிடித்திருந்த நிடினி பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைத்தவர் என்றே சொல்லலாம்.

ஒரு வேகப்பந்துவீச்சளார் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதென்பது மிகப் பெரிய சாதனையே. சர்வதேச அளவில் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடிய வேகப் பந்துவீச்சளார் வரிசையில் இவர் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். முதல் 7 இடங்களில் இருக்கும் வீரர்கள் ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள்.

சர்வதேச அளவில் 100௦௦ டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 49 ஆவது வீரராகவும் 5ஆவது தென்னாபிரிக்க வீரராகவும் இடம்பிடித்த இ வர், 100௦௦ டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய, 2 ஆவது தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையினையும் தனதாக்கியவர்.
1998 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் அந்தப் போட்டியில் முதல், இரண்டாம் இனிங்சில் தலா ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.2000௦௦௦ ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிராக தனது 6ஆவது போட்டியில், முதல் 5 விக்கெட்(66/6) பெறுதியைப் பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 1998 ஆம்ஆண்டில் 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தொடங்கினார். 2002ஆம் ஆண்டு 8 போட்டிகளில் 40 விக்கெட்டுகளையும் 2003ஆம் ஆண்டு 12 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் 2004ஆம் ஆண்டு 11 போட்டிகளில் 39 விக்கெட்டுகளையும் 2005ஆம் ஆண்டு 10 போட்டிகளில் 47 விக்கெட்டுகளையும் 2006ஆம் ஆண்டு 10 போட்டிகளில் 58 விக்கெட்டுகளையும் 2007ஆம் ஆண்டு 9 போட்டிகளில் 35 விக்கெட்டுகளையும் 2008ஆம் ஆண்டு 15 போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் 2009ஆம் ஆண்டு 6 போட்டிகளில் 13விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 15 போட்டிகளில் 58 விக்கெட்டுகளையும் பங்களாதேஷ் அணிக்கெதிராக 8 போட்டிகளில் 35 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணிக்கெதிராக 18 போட்டிகளில் 70 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்கெதிராக 10 போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணிக்கெதிராக 11 போட்டிகளில் 46 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணிக்கெதிராக 9 போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும் இலங்கை அணிக்கெதிராக 12 போட்டிகளில் 35 விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 15 போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும் சிம்பாப்வே அணிக்கெதிராக 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

தென்னாபிரிக்க மண்ணில் 53 போட்டிகளில் 249 விக்கெட்டுகளையும் வெளிநாட்டு மண்ணில் 48 போட்டிகளில் 141விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ள நிடினி,தென்னாபிரிக்க அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் வரிசையில் 2 ஆம் இடத்திலுள்ளார்.

101 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிடினி, ஒரு இனிங்சில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 18 தடவையும் ஒரு போட்டியில்10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 4 தடவைகளும் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 37 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள்.இது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 2005 ஆம் ஆண்டு போர்ட் ஒப் ஸ்பெயினில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட பெறுதியாகும்.இந்தப் போட்டியில் மொத்தமாக 132 ஓட்டங்களைக் கொடுத்து 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிடினி, தென்னாபிரிக்க பந்துவீச்சாளரொருவர் ஒரு போட்டியில் பெற்ற சிறந்த பந்துவீச்சுப் பெறுதி என்ற சாதனையை தன் வசப்படுத்தினார்.தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்ற அந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார் நிடினி.

1998 முதல் இன்று வரை தென்னாபிரிக்க அணி சார்பாக நிடினி விளையாடியுள்ள 101 போட்டிகளின் அடிப்படையில்,தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ள 50 சந்தர்ப்பங்களில் நிடினி வீழ்த்திய விக்கெட்டுகள் 233.தென்னாபிரிக்க அணி தோல்வியுற்ற 28 சந்தர்ப்பங்களில் நிடினி வீழ்த்திய விக்கெட்டுகள் 99 மட்டுமே. தென்னாபிரிக்க அணி வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெற்ற 23 சந்தர்ப்பங்களில் நிடினி வீழ்த்திய விக்கெட்டுகள் 58.
பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டுள்ள இவர் இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கெதிராக ஒரு தடவைகூட ஒரு இனிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை.

மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளராகத் திகழுமிவர் 400 ஆவது விக்கெட்டைக் கைப்பற்ற முடியாமல் போனது துரதிஷ்டவசமே. பந்துவீச்சில் சாதித்த இவர் துடுப்பாட்டத்திலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரன்.அதிக தடவைகள் (21) ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்த தென்னாபிரிக்க வீரரென்ற சாதனையே அது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இவரது பந்துவீச்சு சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக் கொடுத்துள்ளது.173 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 266 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

வேகத்தால் சாதித்த நிடினி இப்போது ஓய்வை நோக்கி....

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates