Pages

Thursday, September 30, 2010

தமிழ்த் திரையுலகில் நடிப்புலக மா மேதை


நடிப்புலக மாமேதை சிவாஜியின் பிறந்தநாளை(அக்டோபர்-01) முன்னிட்டு இந்தப் பதிவு.

சிவாஜி என்ற வி .சி .கணேஷன் தனது ஆரம்ப (10வயதில்) காலங்களில் கல்வியில் ஆர்வம் காட்டியதை விட நாடகங்களின் மீது அதிக ஆர்வம் காட்டினார்.

பாலா கான சபாவில் சேர்ந்து நாடகங்களில் நடித்துத் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திப் பாராட்டுக்களைப் பெற்றார்.எம் .ஆர்.ராதா,என் .எஸ்.கிருஷ்ணன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல நாடகங்களில் நடித்தார் .பின் நாட்களில் சக்தி நாடக சபாவில் இணைந்தார்.அந்தக் காலப் பகுதியில் சிவாஜி நடித்த பராசக்தி நாடகம் திரைப்படமானது.

கருணாநிதி திரைக் கதை எழுதினார்.கதாநாயகனாக சிவாஜியைப் போட முயன்றனர்.ஆனால் சிவாஜியின் தோற்றம் பொருத்தமாக இல்லையென கூறப்பட, சிவாஜி மனமுடைந்தார்.அதன்பின் மூன்று மாதத்தின் பின் சிவாஜியின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட கதாநாயகனாக உருமாறினார்.1952 ஆம் ஆண்டு பாரசக்தி வெளியானது.சிவாஜியின் நடிப்பைப் பலரும் பாராட்டினர்.அதன் பின் சிவாஜியின் நடிப்பில் மனோகரா மாபெரும் வெற்றி கண்டது.சங்கிலியால் பிணைக்கப்பட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்ட சிவாஜி அப்படத்தில் பேசிய வசனங்கள் திரையரங்குகளை அதிர வைத்தது.

பத்மினியுடன் இணைந்து நடித்த தூக்குத் தூக்கி,நடிகை பானுமதியுடன் முதன்முறையாக இணைந்து நடித்த கள்வனின் காதலி என்பன சிவாஜியின் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய படங்கள் எனலாம்.வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் சிவாஜிக்கு ஒரு திருப்புமுனையைக் கொடுத்த படம்.அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 25 வாரங்களைக் கடந்து ஓடியது மட்டுமன்றி எகிப்தில் நடைபெற்ற ஆபிரிக்கப் பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜிக்குப் பெற்றுக் கொடுத்தது.

1961இல் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கையை கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில் படமாக எடுத்தபோது வ.உ.சிதம்பரனார் போலவே வாழ்ந்து காட்டினார் சிவாஜி.
பல்வேறு கதாபாத்திரங்களில் பல வேடங்களில் நடித்த சிவாஜி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

1964 இல் வெளியான நவராத்திரி படத்தில் 9 மாறுபட்ட வேடங்களில் நடித்தார். இந்தப் படம்100 நாட்களைக் கடந்து ஓடியது.சிவாஜிக்கு மற்றுமொரு திருப்பு முனையாக அமைந்த படம் திருவிளையாடல். 25வாரங்களைக் கடந்து ஓடியது.இதைத் தொடர்ந்து சரஸ்வதி சபதம் ,கந்தன் கருணை ,திருவருட் செல்வர் ,திருமால் பெருமை போன்ற படங்களும் வெற்றிப் படங்களாகின.தில்லானா மோகனாம்பாள் வசூல் சாதனையை ஏற்படுத்திய படமானது.

எம் ஜி ஆருடன் கூண்டுக்கிளி ,கமல்ஹாசனுடன் தேவர் மகன் ,ரஜினியுடன் படையப்பா போன்ற படங்களில் நடித்துள்ள சிவாஜி ஏனைய நட்சத்திர நடிக நடிகைகளோடும் பல்வேறு சிறந்த படங்களில் நடித்த பெருமையைப் பெறுகிறார்.
எம்முடன் இன்று சிவாஜி இல்லாவிட்டாலும் அகக் கண்களில் அவரின் காட்சிகள் ஓடிக் கொண்டேயிருக்கின்றன.

பல்வேறு உயரிய விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள சிவாஜி தமிழ்த் திரையுலகில் ஒரு நடிப்புலக மா மேதை.

சிவாஜி நடித்த படங்களைப் பற்றியோ அல்லது சிவாஜியைப் பற்றி பதிவிடவோஒரு பதிவு போதாது. பல பதிவுகள் தேவை.

1 comments:

சகாதேவன் said...

சிவாஜி பற்றிய இன்றைய என் பதிவை பாருங்களேன்.
http://vedivaal.blogspot.com/2010/09/2.html

-சகாதேவன்

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates