தனது நடிப்பால் எம்மையெல்லாம் சிரிக்க சிந்திக்க வைத்த மாபெரும் கலைஞரின் பிறந்த நாள் இன்று.
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராகத் திரையில் இனங் காணப்பட்டவர் நாகேஷ். இதைத் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரமேற்று அசத்தியவரிவர்.இதன் பின் பல வாய்ப்புக்கள் இவரைத் தேடி வந்தாலும் தனது மேடை நடிப்பை தொடர்ந்தார்.பாலச்சந்தர் அவர்களின் பெரும்பாலான படங்களில் நடித்துப் பெருமை பெற்றார்.திருவிளையாடல் படத்தில் தருமி பாத்திரம் அவரின் நடிப்புக்கு மாபெரும் சான்றாக அமைந்தது.தில்லானா மோகனாம்பாள் படத்திலும் சிறப்பாக நடித்துப் பாராட்டுப் பெற்றிருந்தார்.
சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா,வசந்த மாளிகை போன்ற பல நூற்றுக் கணக்கான படங்களில் நகைச்சுவை,குணசித்திர பாத்திரங்களில் நடித்து எல்லோரையும் மகிழ்வித்த மாபெரும் கலைஞர்.இன்று அவர் எம்முடன் இல்லாவிட்டாலும் அவரது படைப்புக்கள் என்றும் எம் அகக் கண்ணில் ஓடிக் கொண்டே இருக்கும்.
நீண்ட நாட்களின் பின் இந்தப் பதிவு. இனி அடிக்கடி பதிவுகள் தொடரும்.
0 comments:
Post a Comment