சூடு பறக்கும் தென்னாபிரிக்கா...
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட்(மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்) போட்டிகள் 2 ஆண்டுகளுக்கொருமுறை நடைபெற்று வருகிறது.
வில்ஸ் சர்வதேச கிண்ணம் என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு இந்தப் போட்டிகள் அறிமுகமாகின.அதன் பின் ஐ.சி.சி நாக் அவுட் போட்டியாக மாறியது.தற்போது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட்(மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்) போட்டியாக நடைபெறுகிறது. 6 ஆவது சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 5 வரை நடைபெறவுள்ளது. இம்முறை 8 அணிகளே களத்தில்.போட்டியில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவாகப் பிரிகப்பட்டுளன. A பிரிவில் இந்தியா,பாகிஸ்தான் அவுஸ்ரேலியா,மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும் B பிரிவில் இலங்கை,இங்கிலாந்து,தென்னாபிரிக்கா,நியூசிலாந்து அணிகளும் உள்ளன
ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்குமணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தவிர ஏனைய 7 அணிகளும் சமபலத்துடனே களம் காண்கின்றன.
11 வருடங்களின் பின்:
கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த முதல் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா கிண்ணத்தை வென்று அசத்தியது.அதற்குப் பின் இத்தொடரில் சாதிக்கவில்லை.தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.சொந்த மண்ணில், தென்னாபிரிக்கா சாதிக்கவில்லை என்பது கவலைதான்.
சொந்த மண்ணில் 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண(50 ஓவர்), 2007 இல் நடந்த '20-20' உலகக்கிண்ணத் தொடர்கள் தென்னாபிரிக்காவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தன. இம் முறை சொந்த மண், தென்னாபிரிக்காவுக்கு கைகொடுக்குமா...
தென்னாபிரிக்க ஆடுகளங்களில் ஏற்கனவே விளையாடிய வீரர்களை வைத்துப் பார்க்கும்போது டில்சான்(இலங்கை),யுவராஜ்சிங் (இந்தியா),அப்ரிடி(பாகிஸ்தான்),மைக்கேல் கிளார்க் (அவுஸ்ரேலியா), கிரகம் சிமித்(தென்னாபிரிக்கா) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ஸ்டூவர்ட் பிராட்(இங்கிலாந்து), மிச்சேல் ஜான்சன் (அவுஸ்ரேலியா),டேல் ஸ்டெய்ன் (தென்னாபிரிக்கா), முரளிதரன் (இலங்கை), வெட்டோரி (நியூசிலாந்து) லசித் மாலிங்க (இலங்கை), ஆகியோர் பந்து வீச்சிலும் சாதிக்கலாமென்பது எனது எதிர்பார்ப்பு.
இறுதிவரை விறுவிறுப்போடு நகரப்போகிறது மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்.....
நேரமில்லாததால் இந்தப் பதிவில் அதிக விடயங்களைத் தரமுடியவில்லை.அடுத்த பதிவில் விரிவாகத் தருகிறேன்.
முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்த ஆர்ஜென்ரின வீரர் டெல் போட்ரோ.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 46.4ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.இதனால் இந்திய அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இதன் மூலம் இலங்கை மண்ணில் நடந்த இரு அணிகளுக்கு மேல் பங்குபற்றிய தொடர்களில், 11 வருடங்களின் பின் இந்தியா இறுதிப்போடியில் வென்று சாதித்தது.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற சச்சின்,ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 59 முறை ஆட்டநாயகன் விருதினையும் 14 முறை தொடர் நாயகன் விருதினையும் பெற்றுள்ளார்.
இன்று இன்னுமொரு சாதனைக்கு உரித்தானார் சனத்.ஒரு மைதானத்தில் கூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையே அது.ஆர்.பிரேமதாச மைதானத்தில் சனத் இதுவரை 70 ௦போட்டிகளில் 2478 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இதற்கு முதல் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம்.இவர் ஷார்ஜா மைதானத்தில் 59 போட்டிகளில் 2464 ஓட்டங்களைப்

முறைப்படி கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானி இசையும் பயின்றுள்ள சின்மயி 'சப்தஸ்வரங்கள்' நிகழ்ச்சியின் மூலம் தனது இசைத் திறமையை வெளிக்காட்ட இவருக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பினை கொடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நெஞ்சில் தில் தில்...என்ற பாடலே இவரின் முதல் பாடல்.
கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நெஞ்சில் தில் தில்...என்ற பாடல் மூலம் 2002 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.இதை விட இன்னும் பல விருதுகளையும் பெற்றுள்ளார் சின்மயி.
ஹர்பஜன் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2007 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய வீரர் சைமன்ட்ஸை குரங்கு என திட்டி அதன் பின் விசாரணைகளை எதிர்கொண்டமையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.2008ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின்போது தனது சக வீரரான ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் அறைந்து,பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.இதற்குத் தண்டனையும் அனுபவித்தார்.



பிரேமதாச மைதானம்