
பதிவுகள் விரைவில் தொடரும்...
வில்ஸ் சர்வதேச கிண்ணம் என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு இந்தப் போட்டிகள் அறிமுகமாகின.அதன் பின் ஐ.சி.சி நாக் அவுட் போட்டியாக மாறியது.தற்போது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட்(மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்) போட்டியாக நடைபெறுகிறது. 6 ஆவது சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 5 வரை நடைபெறவுள்ளது. இம்முறை 8 அணிகளே களத்தில்.போட்டியில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவாகப் பிரிகப்பட்டுளன. A பிரிவில் இந்தியா,பாகிஸ்தான் அவுஸ்ரேலியா,மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும் B பிரிவில் இலங்கை,இங்கிலாந்து,தென்னாபிரிக்கா,நியூசிலாந்து அணிகளும் உள்ளன
ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்குமணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தவிர ஏனைய 7 அணிகளும் சமபலத்துடனே களம் காண்கின்றன.
11 வருடங்களின் பின்:
கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த முதல் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா கிண்ணத்தை வென்று அசத்தியது.அதற்குப் பின் இத்தொடரில் சாதிக்கவில்லை.தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.சொந்த மண்ணில், தென்னாபிரிக்கா சாதிக்கவில்லை என்பது கவலைதான்.
சொந்த மண்ணில் 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண(50 ஓவர்), 2007 இல் நடந்த '20-20' உலகக்கிண்ணத் தொடர்கள் தென்னாபிரிக்காவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தன. இம் முறை சொந்த மண், தென்னாபிரிக்காவுக்கு கைகொடுக்குமா...
தென்னாபிரிக்க ஆடுகளங்களில் ஏற்கனவே விளையாடிய வீரர்களை வைத்துப் பார்க்கும்போது டில்சான்(இலங்கை),யுவராஜ்சிங் (இந்தியா),அப்ரிடி(பாகிஸ்தான்),மைக்கேல் கிளார்க் (அவுஸ்ரேலியா), கிரகம் சிமித்(தென்னாபிரிக்கா) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ஸ்டூவர்ட் பிராட்(இங்கிலாந்து), மிச்சேல் ஜான்சன் (அவுஸ்ரேலியா),டேல் ஸ்டெய்ன் (தென்னாபிரிக்கா), முரளிதரன் (இலங்கை), வெட்டோரி (நியூசிலாந்து) லசித் மாலிங்க (இலங்கை), ஆகியோர் பந்து வீச்சிலும் சாதிக்கலாமென்பது எனது எதிர்பார்ப்பு.
இறுதிவரை விறுவிறுப்போடு நகரப்போகிறது மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்.....
நேரமில்லாததால் இந்தப் பதிவில் அதிக விடயங்களைத் தரமுடியவில்லை.அடுத்த பதிவில் விரிவாகத் தருகிறேன்.
முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்த ஆர்ஜென்ரின வீரர் டெல் போட்ரோ.
தனது குழந்தையுடன் கிளைஸ்டர்ஸ்திருமணத்திற்குப் பின்னர் தாய்மையடைந்த கிளைஸ்டர்ஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதன் பின் அமெரிக்கப் பகிரங்கப் தொடரில் மீண்டும் களமிறங்கி பட்டத்தைக் கைப்பற்றி தனது மீள் வருகையை உறுதி செய்துள்ளார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 46.4ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.இதனால் இந்திய அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இதன் மூலம் இலங்கை மண்ணில் நடந்த இரு அணிகளுக்கு மேல் பங்குபற்றிய தொடர்களில், 11 வருடங்களின் பின் இந்தியா இறுதிப்போடியில் வென்று சாதித்தது.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற சச்சின்,ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 59 முறை ஆட்டநாயகன் விருதினையும் 14 முறை தொடர் நாயகன் விருதினையும் பெற்றுள்ளார். ஆர்.பிரேமதாச மைதானத்தில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் சச்சினுக்கு சொந்தமானது. இந்த மைதானத்தில் சச்சின் 27 போட்டிகளில் 4 சதமடங்கலாக 1096 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் 1998ஆம் ஆண்டு நடந்த மும்முனைப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதில் சச்சின் சதமடித்திருந்தார்.அதே பாணியில் 11வருடங்களின் பின் இப்போது மீண்டும் சதமடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
சச்சின்..... சாதனை நாயகன்....
இன்று இன்னுமொரு சாதனைக்கு உரித்தானார் சனத்.ஒரு மைதானத்தில் கூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையே அது.ஆர்.பிரேமதாச மைதானத்தில் சனத் இதுவரை 70 ௦போட்டிகளில் 2478 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இதற்கு முதல் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம்.இவர் ஷார்ஜா மைதானத்தில் 59 போட்டிகளில் 2464 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
சாதனை நாயகனை அண்மையில் சக்தி fm கலையகத்தில் சந்தித்தபோது....
முறைப்படி கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானி இசையும் பயின்றுள்ள சின்மயி 'சப்தஸ்வரங்கள்' நிகழ்ச்சியின் மூலம் தனது இசைத் திறமையை வெளிக்காட்ட இவருக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பினை கொடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நெஞ்சில் தில் தில்...என்ற பாடலே இவரின் முதல் பாடல்.
கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நெஞ்சில் தில் தில்...என்ற பாடல் மூலம் 2002 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.இதை விட இன்னும் பல விருதுகளையும் பெற்றுள்ளார் சின்மயி. பாடகியாக மட்டுமன்றி தொலைக்காட்சி,வானொலி அறிவிப்பாளராகவும் தனது குரலால் பலரையும் கவர்ந்தவர் என்றால் மிகையில்லை.
லதா மங்கேஷ்கர்,சித்ரா,ஜானகி ஆகியோரின் பாடல்கள் அதிகம் பிடிக்கும் எனக் கூறும் சின்மயி,நல்ல பாடகியாக தனது இசைப் பயணம் தொடரவேண்டுமென்பதே இலட்சியம் எனக் கூறுகிறார்.
வாழ்த்துக்கள் சின்மயி...உங்கள் இசைப் பயணம் தொடரட்டும்...
ஹர்பஜன் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2007 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய வீரர் சைமன்ட்ஸை குரங்கு என திட்டி அதன் பின் விசாரணைகளை எதிர்கொண்டமையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.2008ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின்போது தனது சக வீரரான ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் அறைந்து,பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.இதற்குத் தண்டனையும் அனுபவித்தார்.
ஹர்பஜனின் தூஸ்ரா புகைப்படப்பிடிப்பாளரை நோக்கி பலமாக....
ஹர்பஜனின் இந்தக் குத்து தூஸ்ராவைவிட மோசமாகவே தென்பட்டது அந்த கட்சியைப் பார்த்தபோது. இதை பார்த்த ஏனைய படப்பிடிப்பாளர்களும் புகைப்படப்பிடிப்பாளர்களும் சும்மா இருப்பார்களா?தாம் எதிர்பாராத இந்த அரிய காட்சியைத் தமது கேமராவுக்குள் பத்திரமாகப் பதித்துக்கொண்டனர். இப்போது கிரிக்கெட் உலகில் இதுதான் பரபரப்பு........ கொஞ்ச நாட்களுக்கு ஹர்பஜன் பேச்சுதான் கிரிக்கெட்டில்.
ஹர்பஜன்....அதிகம் கோபப்படாதீர்....கோபத்தால் சாதிக்க முடியாது உமக்கு.....
சர்ச்சை நாயகனுக்கு இப்போது வந்திருப்பது அணித் தலைவர் ஆசை. இப்போதைக்கு நிறைவேறாது இந்தப் பேராசை.......