நடிப்புலக மாமேதை சிவாஜியின் பிறந்தநாளை(அக்டோபர்-01) முன்னிட்டு இந்தப் பதிவு.
சிவாஜி என்ற வி .சி .கணேஷன் தனது ஆரம்ப (10வயதில்) காலங்களில் கல்வியில் ஆர்வம் காட்டியதை விட நாடகங்களின் மீது அதிக ஆர்வம் காட்டினார்.
பாலா கான சபாவில் சேர்ந்து நாடகங்களில் நடித்துத் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திப் பாராட்டுக்களைப் பெற்றார்.எம் .ஆர்.ராதா,என் .எஸ்.கிருஷ்ணன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல நாடகங்களில் நடித்தார் .பின் நாட்களில் சக்தி நாடக சபாவில் இணைந்தார்.அந்தக் காலப் பகுதியில் சிவாஜி நடித்த பராசக்தி நாடகம் திரைப்படமானது.



பல்வேறு கதாபாத்திரங்களில் பல வேடங்களில் நடித்த சிவாஜி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
1964 இல் வெளியான நவராத்திரி படத்தில் 9 மாறுபட்ட வேடங்களில் நடித்தார். இந்தப் படம்100 நாட்களைக் கடந்து ஓடியது.சிவாஜிக்கு மற்றுமொரு திருப்பு முனையாக அமைந்த படம் திருவிளையாடல். 25வாரங்களைக் கடந்து ஓடியது.இதைத் தொடர்ந்து சரஸ்வதி சபதம் ,கந்தன் கருணை ,திருவருட் செல்வர் ,திருமால் பெருமை போன்ற படங்களும் வெற்றிப் படங்களாகின.தில்லானா மோகனாம்பாள் வசூல் சாதனையை ஏற்படுத்திய படமானது.
எம் ஜி ஆருடன் கூண்டுக்கிளி ,கமல்ஹாசனுடன் தேவர் மகன் ,ரஜினியுடன் படையப்பா போன்ற படங்களில் நடித்துள்ள சிவாஜி ஏனைய நட்சத்திர நடிக நடிகைகளோடும் பல்வேறு சிறந்த படங்களில் நடித்த பெருமையைப் பெறுகிறார்.
எம்முடன் இன்று சிவாஜி இல்லாவிட்டாலும் அகக் கண்களில் அவரின் காட்சிகள் ஓடிக் கொண்டேயிருக்கின்றன.
பல்வேறு உயரிய விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள சிவாஜி தமிழ்த் திரையுலகில் ஒரு நடிப்புலக மா மேதை.
சிவாஜி நடித்த படங்களைப் பற்றியோ அல்லது சிவாஜியைப் பற்றி பதிவிடவோஒரு பதிவு போதாது. பல பதிவுகள் தேவை.