Pages

Monday, June 14, 2010

தம்புள்ள நோக்கி.....

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நாளை முதல் இலங்கையின் தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளன.இம்முறை இலங்கை, இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் பலம் கான களம் காண்கின்றன. அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ளன.

இலங்கை
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவரான அரவிந்த டி சில்வா தலைமையிலான குழு, தேர்வு செய்துள்ள அணியில் அண்மைக் காலமாக பிரகாசிக்கத் தவறி வந்த சனத் அணியிலில்லை.அஜந்த மென்டிசுக்குப் பதிலாக நீண்ட நாட்களின் பின் ரங்கன ஹேரத் அணியில் அங்கம் வகிக்கிறார்.மஹேல, சங்ககார, முரளி, மலிங்க ஆகியோர் அணிக்கு மீண்டும் வருவதால் இலங்கை அணியின் பலம் அதிகமே. இதே அணி சிறப்பாக வழி நடத்தப்பட்டால் 2011ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் அதிகம் சாதிக்கும்.

இந்தியா
அண்மைக் காலமாக 2௦-20உலகக் கிண்ணக் கிரிக்கெட்,சிம்பாப்வே தொடர் ஆகியவற்றில் சாதிக்கத் தவறியதால் பல விதமான அழுத்தத்துடன் இத் தொடரை எதிர் கொள்கிறது இந்தியா.அண்மைக் காலமாக சாதிக்கத் தவறும் யுவராஜ் அணியில் இல்லை. யூசுப் பத்தான் அதிரடியாய் நீக்கம்.சச்சின் தனிப்பட்டகாரணங்களால் ஓய்வு.ஐ .பி. எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடி அசத்திய சௌரப் திவாரி இத் தொடரில் அறிமுகமாகலாம்.டோனியின் மாநிலத்திலிருந்து டோனியின் சாயலில் வருகிறார்.எதிர் காலத்தில் பெண் கிரிக்கெட் ரசிகர்களின் நாயகன் இவர்தான்.

பாகிஸ்தான்
அப்ரிடியின் தலைமையில் பல இளம் வீரர்களுடன் களம் காணவுள்ளது பாகிஸ்தான். நீண்ட இடைவெளிக்குப் பின் "குழப்படி நாயகன்- ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" அக்தார் அணிக்கு வருவது பாக் அணிக்கு பலமே. பாக். கிரிக்கெட் சபையால் தடை செய்யப்பட்டு பின் அதிரடியாய் தடை நீக்கப்பட்ட சொகைப் மலிக் அணிக்குள் வருவதும் பலமே.இவர்கள் இருவரையும் அதிகம் நம்பியுள்ளார் அப்ரிடி நம்பிக்கை வீணாகுமா?


பங்களாதேஷ்
அதிக அனுபவமில்லாத அணியென்று சொல்லப்பட்டாலும் அதிரடியாய் விளையாடும் அணி பங்களாதேஷ். இந்த அணியில் துடுப்பாட்டத்தில் அதிகம் சாதிக்கத் தவறும் அஷ்ரபுல் இன்னும் அணிக்குள் இருப்பது மாயமே.இத் தொடரே இவரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை நிர்ணயிக்கும். அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலின் அதிரடி தொடர்ந்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கையும் அதிகரிக்கும்.அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் சகல துறை வீரராக சாதிப்பாரா?


அதிகம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் அமைவதால் ஒரு அணி 300 ஓட்டங்களைப் பெறுமா என்பது சந்தேகமே.தம்புள்ள மைதானத்தில் இலங்கை அணி,பாக் அணிக்கெதிராக கூடுதலான 289 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஆசிய நாடுகள் நான்கும் தம்மிடையே மோதி வல்லவன் யார் என்பதை தாமே தீர்மானிக்கப் போகின்றன இம்மாதம் 24ஆம் திகதி.



2 comments:

KANA VARO said...

ம்ம்ம் பார்ப்போம் முடிவை...

Nishan Thirumalaisami said...

நல்லாயிருக்கு மயூரன் அண்ணா....

இதையும் கொஞ்சம் வாசிங்க....

ஆசிய கிண்ண கிரிக்கெட் திருவிழா
http://tnishan.blogspot.com/2010/06/blog-post_12.html

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates