Pages

Thursday, June 10, 2010

உதைக்குப் பின் முத்தம்


கால்பந்தாட்ட ரசிகர்களின் கனவுத் திருவிழா இம்மாதம் ( ஜூன்) 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கிறது.விளையாட்டுலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்தாட்டத்தின் சிகரமாய் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் அமைகின்றன.

1930௦ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை 18 உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.19ஆவதுஉலகக் கிண்ண போட்டிகள் தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. 32 அணிகள் அடுத்த மாதம் வரை மோதி தம் பலத்தை நிரூபிக்கவுள்ளன.மொத்தம் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளை நடாத்தும் சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பான பீபா(fifa)1904 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னரே சர்வதேச அளவில் கால்பந்தாட்டம் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டது.அதனடிப்படையில் பிரான்சில் நடந்த ஒலிம்பிக்கில் கால்பந்தாட்டம் இணைத்துக்கொள்ளப்பட்டது. இறுதிப் போட்டியில் உருகுவே, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. அதில் உருகுவே வெற்றி பெற்று முதல் ஒலிம்பிக் கால்பந்தாட்ட சாம்பியனானது

அதன் பின்னர் சர்வதேச அளவில்உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்த சர்வதேச கால்பந்தாட்டக் கூட்டமைப்பு தீர்மானித்தது. முதன் முதலில்1930 ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.அதில் உருகுவே வெற்றிபெற்று சம்பியனானது.
4ஆண்டுகளுக்கொருமுறை போட்டிகள் நடைபெறும் வகையில் அட்டவணைப்படுத்தப்பட்டன.இருந்தாலும் உலகப்போர் காரணமாக 1942,1946 ஆம் ஆண்டுகளில் போட்டிகள் நடைபெறவில்லை.அதன் பின்1950 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எந்தவித தடங்கலுமின்றிபோட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடைபெற்றுள்ள உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள் ஒரே பார்வையில்
ஆண்டு போ. ந.பெ. நாடு வெ.பெ. அணி ப. ப நா. எ
1930 உருகுவே உருகுவே 13
1934 இத்தாலி இத்தாலி 16
1938 பிரான்ஸ் இத்தாலி 15
1950 பிரேசில் உருகுவே 13
1954 சுவிட்சர்லாந்து மேற்குஜேர்மனி 16
1958 சுவீடன் பிரேசில் 16
1962 சிலி பிரேசில் 16
1966 இங்கிலாந்து இங்கிலாந்து 16
1970 மெக்ஸிகோ பிரேசில் 16
1974 ஜெர்மனி மேற்குஜேர்மனி 16
1978 ஆர்ஜென்ரினா ஆர்ஜென்ரினா 16
1982 ஸ்பெயின் இத்தாலி 24
1986 மெக்ஸிகோ ஆர்ஜென்ரினா 24
1990 இத்தாலி மேற்குஜேர்மனி 24
1994 அமெரிக்கா பிரேசில் 24
1998 பிரான்ஸ் பிரான்ஸ் 32
2002 கொரியா/ஜப்பான் பிரேசில் 32
2006 ஜெர்மனி இத்தாலி 32
2010 தென்னாபிரிக்கா ????????? 32

குறிப்பு:போ. .பெ. நாடு - போட்டிகள் நடைபெற்ற நாடு, வெ.பெ. அணி - வெற்றி பெற்ற அணி, ப. ப நா. எ - பங்குபற்றிய நாடுகளின் எண்ணிக்கை


இதுவரை அதிக உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட தொடரில்(19) பங்குபற்றிய பெருமை பிரேசில் அணிக்கே உள்ளது. இத்தாலி17ஆவது தடவையாகவும் ஆர்ஜென்ரினா15ஆவது தடவையாகவும் மெக்ஸிகோ 14ஆவது தடவையாகவும் ஸ்பெயின் 13ஆவது தடவையாகவும் களம் காண்கின்றன.

பிரேசில் 5 முறையும் இத்தாலி 4 முறையும் ஜெர்மனி 3 முறையும் உருகுவே மற்றும் ஆர்ஜென்ரினா என்பன 2 முறையும் பிரான்ஸ், இங்கிலாந்து என்பன 1 முறையும் உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளன.

இம்முறை பல நாடுகளின் முக்கிய வீரர்கள் உபாதைக்குள்ளாகி போட்டிகளில் பங்கேற்க முடியாமையால் அந்த அணிகள் சாதிக்குமா என்பது கேள்விக்குறியே.

பிரேசில்,இத்தாலி, இங்கிலாந்து, ஜேர்மனி, ஆர்ஜென்ரினா மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் முன்னேறிச் செல்லுமென எதிர்பார்க்கலாம்.

உலகக் கிண்ணத்தை முத்தமிடப் பல அணிகள் முயன்றாலும் உலகக் கிண்ணம் யார்வசம் சென்று முத்தம் பெற ஆசைப்படுகிறதோ .........

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates