முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கையணிஆரம்பத்தில் மந்தமாகவே ஓட்டங்களைப் பெற்றாலும் பின் வரிசையில் மஹேல,குலசேகர,திசர பெரேரா ஆகியோரின் துடுப்பாட்டத்தின் உதவியால் ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ஓட்டங்களைப் பெற்றது. (மஹேல-103*) 275 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா களமிறங்கியது. இந்தியாவுக்கு ஆரம்பத்திலே மாலிங்க அதிர்ச்சியைக் கொடுத்தார்.சச்சின்,சேவாக் விரைவில் வெளியேறினர்.கம்பீர்,கோலி இணைப்பாட்டம் ,கம்பீர் டோனி இணைப்பாட்டம் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களைப் பெற்று இந்தியா 6 விக்கெட்டால் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலக சாம்பியனானது.(கம்பீர் 97,டோனி 91*) 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா மீண்டும் உலக சாம்பியனானது.மீண்டும் இரண்டாவது தடவையாக இலங்கை இரண்டாமிடத்தைப் பெற்றது.
ஆட்ட நாயகன்: டோனி
தொடர் நாயகன்: யுவ்ராஜ் சிங். இந்த இறுதிப் போட்டியுடன் முரளியும் ஒருநாள் போட்டிகளிலிருந்து விடை பெற்றுக் கொண்டார்.
சாதனை நாயகனான முரளி பற்றிய சிறப்புப் பதிவு விரைவில்.